சிறுபான்மையினர் நலன் அமைச்சகம்
சிறுபான்மையினர் நலனுக்கான திட்டங்கள் குறித்து மத்திய அமைச்சரின் பதில், தமிழகத்தில் பயனாளிகளின் விவரம்
Posted On:
22 JUL 2021 4:34PM by PIB Chennai
நாடாளுமன்றத்தின் மக்களவையில் கேள்விகளுக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த மத்திய சிறுபான்மையினர் நலன் அமைச்சர் திரு முக்தார் அப்பாஸ் நக்வி கீழ்காணும் தகவல்களை அளித்தார்.
சிறுபான்மையினர் உள்ளிட்ட சமுதாயத்தின் அனைத்து பிரிவினரின், குறிப்பாக நாடு முழுவதுமுள்ள பொருளாதாரத்தில் நலிவடைந்தோர் மற்றும் பின்தங்கியோரின் நலனுக்காக பிரதமரின் மக்கள் ஆரோக்கிய திட்டம், பிரதமரின் முத்ரா திட்டம், பிரதமரின் விவசாயிகள் சம்மான் நிதி, பிரதமரின் உஜ்வாலா திட்டம், பிரதமரின் வீட்டுவசதி திட்டம், பெண் குழந்தைகள் கல்விக்கான திட்டம் உள்ளிட்டவற்றை அரசு செயல்படுத்தி வருகிறது.
மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட ஆறு சிறுபான்மை சமுதாயத்தினரான இஸ்லாமியர்கள், கிறித்துவர்கள், சீக்கியர்கள், புத்த மதத்தினர், பார்சிக்கள் மற்றும் சமணர்களுக்கான சமூக-பொருளாதார திட்டங்களை சிறுபான்மையினர் நலன் அமைச்சகம் செயல்படுத்தி வருகிறது.
மெட்ரிக் கல்விக்கு முந்தைய மற்றும் பிந்தைய உதவித்தொகை திட்டங்கள், மௌலானா ஆசாத் தேசிய கல்வி உதவித்தொகை திட்டம், நயா சவேரா எனும் இலவச பயிற்சி திட்டம், படோ பர்தேஷ் எனும் வெளிநாட்டில் பயில்வதற்கான கல்விக் கடன்களுக்கான வட்டி கழிவு திட்டம், யூபிஎஸ்சி, மாநில பணியாளர் தேர்வாணையம், எஸ்எஸ்சி ஆகியவற்றில் அடிப்படை தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கான ஆதரவு திட்டமான நயி உதான், பெண்களுக்கான நயி ரோஷினி, திறன் வளர்த்தலுக்கான சீக்கோ அவுர் காமோ, பிரதமரின் ஜன் விகாஸ் திட்டம், ஜியோ பார்சி, உஸ்தாத், நயி மன்சில், ஹமாரி தரோஹர், மௌலானா ஆசாத் கல்வி அமைப்பு, தேசிய சிறுபான்மையினர் மேம்பாடு மற்றும் நிதி நிறுவனத்துக்கான நிதி உள்ளிட்டவை செயல்படுத்தப்பட்டு வருகிறன.
மெட்ரிக் கல்விக்கு முந்தைய மற்றும் பிந்தைய உதவித்தொகை திட்டங்களுக்கு மட்டும் முறையே ரூ 2670.75 கோடி மற்றும் ரூ 942.21 கோடி செலவிடப்பட்டு, 10614317 மற்றும் 1391274 பேர் பயனடைந்துள்ளனர்.
மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட ஆறு சிறுபான்மை சமுதாயத்தினரான இஸ்லாமியர்கள், கிறித்துவர்கள், சீக்கியர்கள், புத்த மதத்தினர், பார்சிக்கள் மற்றும் சமணர்களின் நலனுக்காக, இப்பிரிவுகளில் உள்ள மாணவர்களுக்காக மெட்ரிக் கல்விக்கு முந்தைய மற்றும் பிந்தைய உதவித்தொகை திட்டங்கள் உள்ளிட்டவற்றை சிறுபான்மையினர் நலன் அமைச்சகம் செயல்படுத்தி வருகிறது.
2018-19 முதல் 2020-21 வரையிலான 3 ஆண்டுகளில் மட்டும் மெட்ரிக் கல்விக்கு முந்தைய உதவித்தொகை திட்டத்திற்கு 2,87,99,025 பேர் விண்ணப்பித்த நிலையில், 1,63,06,171 பேர் பயனடைந்தனர்.
2018-19 முதல் 2020-21 வரையிலான 3 ஆண்டுகளில் மட்டும் மெட்ரிக் கல்விக்கு பிந்தைய உதவித்தொகை திட்டத்திற்கு 53,29,846 பேர் விண்ணப்பித்த நிலையில், 20,75,539 பேர் பயனடைந்தனர்.
மெட்ரிக் கல்விக்கு முந்தைய மற்றும் பிந்தைய உதவித்தொகை திட்டங்களுக்கு 2018-19 முதல் 2020-21 வரையிலான 3 ஆண்டுகளில் முறையே ரூ 5441.50 கோடி மற்றும் ரூ 5123.04 கோடி செலவிடப்பட்டது.
மெட்ரிக் கல்விக்கு முந்தைய உதவித்தொகை திட்டத்திற்கு 2018-19 முதல் 2020-21 வரையிலான 3 ஆண்டுகளில் தமிழ்நாட்டிலிருந்து 1380582 விண்ணப்பங்கள் பெறப்பட்டு, 1077910 பேருக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
தேசிய சிறுபான்மையினர் ஆணைய சட்டம், 1992-ன் பிரிவு 2-ன் படி, இஸ்லாமியர்கள், கிறித்துவர்கள், சீக்கியர்கள், புத்த மதத்தினர், பார்சிக்கள் மற்றும் சமணர்கள் ஆகிய ஆறு சமுதாயங்கள் சிறுபான்மை சமுதாயங்களாக அறிவிக்கப்பட்டன.
2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, 2,08,33,116 கிறித்தவர்கள், 2,78,19,588 சீக்கியர்கள், 17,22,45,158 இஸ்லாமியர்கள், 84,42,972 புத்த மதத்தினர் மற்றும் 44,51,753 சமணர்கள் நாட்டில் உள்ளனர். இவர்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
2018-19 முதல் 2020-21 வரையிலான மூன்று வருடங்களில் மெட்ரிக்கிற்கு முந்தைய உதவித்தொகைக்கு ரூ 3826.57 கோடியும், மெட்ரிக்கிற்கு பிந்தைய உதவித்தொகைக்கு ரூ 1296.47 கோடியும், மெரிட் சார்ந்த உதவித்தொகைக்கு ரூ 943.144 கோடியும், மௌலான ஆசாத் தேசிய உதவித்தொகை திட்டத்திற்கு ரூ 271.35 கோடியும், படோ பர்தேஷ் திட்டத்திற்கு ரூ 79.63 கோடியும், நயி உதானுக்கு ரூ 18.9 கோடியும் வழங்கப்பட்டுள்ளது.
2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, மொத்தமுள்ள சிறுபான்மையினரில் 3.61 சதவீதம் புத்த மதத்தினர், 11.9 சதவீதம் கிறித்தவர்கள், 1.9 சதவீதம் சமணர்கள், 73.66 சதவீதம் இஸ்லாமியர்கள், 0.02 சதவீதம் பார்சிக்கள் மற்றும் 8.91 சதவீதம் சீக்கியர்கள் உள்ளனர்.
சிறுபான்மையினருக்கான நலத்திட்டங்கள் மூலம் பலனடைந்தவர்களை பொருத்தவரை இஸ்லாமியர்கள் 75.58 சதவீதமாகவும், கிறித்துவர்கள் 12.15 சதவீதமாகவும், சீக்கியர்கள் 8.19 சதவீதமாகவும், புத்த மதத்தினர் 2.80 சதவீதமாகவும், சமணர்கள் 1.27 சதவீதமாகவும், பார்சிக்கள் 0.01 சதவீதமாகவும் உள்ளனர்.
சிறுபான்மையினர் நல அமைச்சகத்திற்கான ஒதுக்கீடு 2018-19-ம் ஆண்டில் ரூ 4700 கோடியாக இருந்த நிலையில், 2020-21-ல் இது 7 சதவீதம் அதிகரித்து ரூ 5029 கோடியாக உள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்புகளைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1737752
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1737754
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1737756
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1737758
----
(Release ID: 1737889)
Visitor Counter : 2271