பாதுகாப்பு அமைச்சகம்

இரண்டு நாள் பயணமாக பெங்களூரு சென்றுள்ளார் ராணுவ துணைத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சிபி மொஹந்தி

Posted On: 22 JUL 2021 2:27PM by PIB Chennai

ராணுவ துணைத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சிபி மொஹந்தி, இரண்டு நாள் பயணமாக பெங்களூரு சென்றுள்ளார். இன்று (ஜூலை 22, 2021), உள்நாட்டு பாதுகாப்பு தளவாடங்கள் உற்பத்தியாளர்களான டாட்டா அட்வான்ஸ்டு சிஸ்டம்ஸ் நிறுவனம் மற்றும் அரூ தனியார் நிறுவனத்துடன் கலந்துரையாடினார். பீரங்கிகள் போன்ற வெடி பொருட்கள் சம்பந்தமான தளங்கள், மின்னணு உள்ளிட்ட பிரிவுகளில் ஏற்பட்டுள்ள வளர்ச்சி குறித்து உற்பத்தியாளர்கள் விளக்கமளித்தனர்.

சிறப்பு குளிர்கால உடைகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள மேம்பட்ட அம்சங்களையும் அவர் பார்வையிட்டார். இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தின் ஹெலிகாப்டர் பிரிவின் வளர்ச்சி நிலையையும் அவர் ஆய்வு செய்தார்.

ஜூலை 23 அன்று பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் பொதுத்துறை நிறுவனங்களான பாரத் மின்னணு நிறுவனம், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) உள்ளிட்டவற்றின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடுவதுடன், ஆகாஷ் ஏவுகணை, விண்வெளி தொலைத்தொடர்பு உபகரணங்கள் குறித்த செயல் விளக்கங்களையும் ராணுவ துணைத் தளபதி பார்வையிடுவார். இஸ்ரோ தலைவர் டாக்டர் கே சிவனையும் அவர் சந்தித்துப் பேசுவார். லார்சன் அன்ட் டூப்ரோ நிறுவனத்தின் பிராந்திய தலைவர்கள், பல்வேறு அமைப்பு முறைகள் குறித்து விளக்கமளிப்பார்கள்.

நகரின் முக்கிய பாதுகாப்பு தலைவர்களுடன் பலதரப்பு விஷயங்கள் குறித்து லெப்டினன்ட் ஜெனரல் சிபி மொஹந்தி உரையாற்றுவார். ஏவுகணைகள், செயற்கை நுண்ணறிவு, ரோபோடிக்ஸ் உள்ளிட்ட தொழில்நுட்பங்களில் அதிக கவனம் செலுத்தப்படும். பாதுகாப்பு துறையினருடனான கலந்துரையாடலின் போதுராணுவத் துறையில் தற்சார்பு' என்பதை கருப்பொருளாகக்  கொண்டு ராணுவ துணைத் தளபதி உரையாடுவார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1737681

 

----



(Release ID: 1737780) Visitor Counter : 233


Read this release in: English , Urdu , Hindi