அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

பிரதமரின் தற்சார்பு இந்தியா கனவை அடைவதில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் அதிக முக்கியத்துவம் பெறுகிறது: மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்

Posted On: 21 JUL 2021 5:12PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடியின் தற்சார்பு இந்தியா கனவை அடைவதில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் அதிக முக்கியத்துவம் பெற்றிருப்பதாக மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், புவி அறிவியல் துறைகளின் இணை அமைச்சரும் (தனிப்பொறுப்புகள்), பிரதமர் அலுவலகம், பணியாளர், பொதுமக்கள் குறைதீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள், அணுசக்தி மற்றும் விண்வெளி ஆகிய துறைகளின் இணை அமைச்சருமான டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.

தன்னிறைவு அடைவதற்கான தன்னம்பிக்கை வருங்கால தலைமுறையினருக்கு எடுத்துச் செல்லப்பட்டு, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் சிறந்த அறிவாளிகளை ஈர்ப்பதற்கு உதவிகரமாக இருக்கும் என்று அவர் கூறினார். இந்திய அணு எரிசக்தி ஆணையத்தின் முன்னாள் தலைவர் டாக்டர் அனில் ககோட்கர் தலைமையில் தயாரிக்கப்பட்ட சர்வதேச அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு பற்றிய ஆய்வுக் குழுவின் அறிக்கையை வெளியிட்டுப் பேசிய போது டாக்டர் ஜிதேந்திர சிங் இதனைத் தெரிவித்தார்.

 

தற்போது 44 நாடுகளுடன் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பில் இந்தியா ஈடுபட்டிருப்பதாகவும், வரும் நாட்களில் இந்த பட்டியல் விரிவுபடுத்தப்படும் என்றும் அமைச்சர் கூறினார். நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் நல்ல பலனை அடைவதற்காக அமைச்சகத்தின் அடிப்படையில் அல்லாமல் குறிப்பிட்ட பிரிவின் அடிப்படையில் திட்டங்களை மேற்கொள்ள அமைச்சர் அழைப்பு விடுத்தார். சர்வதேச ஒத்துழைப்பில் மேலும் பல அறிவுசார் நிபுணர்களை இணைக்குமாறும், அதேவேளையில் உள்நாட்டுடன் ஆழ்ந்த தொடர்பில் தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். இதுபோன்ற ஒத்துழைப்பின் உண்மையான சாத்தியக்கூறுகளை அடைவதற்கு அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தையும் தாண்டி முன்னேற வேண்டும் என்றார் அவர்.

அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம், புவி அறிவியல் அமைச்சகம் மற்றும் அறிவியல் மற்றும் தொழிலக ஆராய்ச்சி மன்றத்துடன் இந்திய அரசின் ஒவ்வொரு அமைச்சகங்கள் மற்றும் துறைகளிடையே ஓர் விவாதம் விரைவில் நடைபெற இருப்பதாகவும் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1737528

-----(Release ID: 1737554) Visitor Counter : 155