ரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சகம்

நானோ யூரியா உற்பத்தியை அதிரிக்க அரசு முயற்சி: மக்களவையில் மத்திய அமைச்சர் தகவல்

Posted On: 20 JUL 2021 5:08PM by PIB Chennai

நாட்டில் நானோ உரங்களின் உற்பத்தியை, மத்திய அரசு ஊக்குவிப்பதாக மக்களவையில் தெரிவிக்கப்பட்டது.

மக்களவையில் மத்திய ரசாயண மற்றும் உரத்துறை அமைச்சர் திரு.மன்சுக் மாண்டவியா எழுத்து பூர்வமாக அளித்த பதிலில் கூறியதாவது:

நாட்டில் நானோ உரங்களின் உற்பத்தியை அரசு ஊக்குவித்து வருகிறது. உரக் கட்டுப்பாட்டு ஒழுங்கு முறையில், ஏதாவது நானோ உரங்களைச் சேர்க்க வேண்டும் என்றால், அறிவிப்பில் குறிப்பிடப்பட்ட வழிகாட்டுதல்களைப் பின்பற்ற வேண்டும் என வேளாண்துறை கடந்த பிப்ரவரி 24-ஆம் தேதி வெளியிட்ட அறிவிப்பில் தெரிவித்துள்ளது. நானோ யூரியா என்ற திரவ உரத்தை, இந்திய விவசாயிகள் உரங்கள் கூட்டுறவு நிறுவனம்(IFFCO) இந்தியாவில் 3 ஆண்டு காலத்துக்கு தயாரிக்கவுள்ளது.

யூரியா அதிகம் பயன்படுத்தும் பிரச்னையைத் தீர்க்க நானோ யூரியா அடிப்படையிலான நானோ தொழில்நுட்பத்தை ஐஎப்எப்சிஓ உருவாக்கியுள்ளது. இது பயிர் உற்பத்தியையும், மண்வளத்தையும், சத்துக்களின் தரத்தையும் மேம்படுத்தும்.

கொவிட்-19 தடுப்பூசி உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை:

அவசர காலத்துக்கு கட்டுப்பாடுகளுடன், கொவிட்-19 தடுப்பூசிகளை உற்பத்தி் செய்ய தனியார் நிறுவனங்களுக்கு மத்திய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு அமைப்பு (CDSCO) அனுமதி வழங்கியுள்ளது.

புனேவில் உள்ள சீரம் இந்தியா நிறுவனமும், ஐதராபாத்தில் உள்ள பாரத் பயோடெக் நிறுவனமும்  கொரோனா தடுப்பூசிகளைக் கடந்த  3.1.2021-ம் தேதி உற்பத்தி செய்தன

ஸ்புட்னிக்-வி தடுப்பூசியை புதுதில்லியில் உள்ள ஆர்ஏ (பயாலஜிக்கல்ஸ்) பனாசியா பயோடெக் நிறுவனம் கடந்த 2-ஆம் தேதி உற்பத்தி செய்தது.

இந்தியாவில் தடுப்பூசி உற்பத்திக்கு உதவ, மத்திய அரசு கொவிட் சுரக்‌ஷா திட்டத்தை தொடங்கியது. இதை உயிரி தொழில்நுட்பத் துறையின், உயிரி தொழில்நுட்பத் தொழில் ஆராய்ச்சி உதவிக் கவுன்சில் (BIRAC) அமல்படுத்துகிறது.

இத்திட்டத்தின் கீழ் ஜைடஸ்கேடிலா நிறுவனத்தின் டிஎன்ஏ தடுப்பூசி, ஜெனோவா பயோபார்மாடிக்கல்ஸ் நிறுவனத்தின் எம்ஆர்என்ஏ தடுப்பூசி, பாரத் பயோடெக் நிறுவனத்தின் மூக்கில் செலுத்தப்படும் தடுப்பு மருந்து ஆகியவை குறித்து மருத்தவ பரிசோதனைகள் நடந்து வருகின்றன. இதற்கு அரசு உதவி வருகிறது

மேலும் கோவாக்சின் உற்பத்தியை அதிகரிக்க, கோவிட் சுரக்‌ஷா திட்டத்தின் கீழ் உதவி அளிக்கப்பட்டு வருகிறது.

கோவாக்சின் உற்பத்திக்கான தொழில்நுட்பம், பாரத் பயோக் டெக் நிறுவனத்திடம் இருந்து, குஜராத் கொவிட் தடுப்பூசி கூட்டமைப்புக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதில் உள்ள ஜெஸ்தர் உயிரிஅறிவியல், மற்றும் ஆம்னி பிஆர்எக்ஸ் உயிரி தொழில்நுட்ப நிறுவனத்துக்கு தேவையான உதவிகளை உயிரிதொழில்நுட்பத்துறை செய்து வருகிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1737239

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1737241

----



(Release ID: 1737358) Visitor Counter : 317


Read this release in: English , Marathi , Punjabi