சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

தேசிய சுகாதார இயக்கத்தின் கீழ் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியின் பயன்பாடு

Posted On: 20 JUL 2021 3:55PM by PIB Chennai

மாநிலங்களவையில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலன் இணை அமைச்சர் டாக்டர் பாரதி பிரவீன் பவார், கீழ்கண்ட தகவல்களை அளித்தார்.

தேசிய சுகாதார இயக்கத்தின் கீழ் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு 2013-14-ம் நிதியாண்டில் ரூ 17,407.39 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், இது படிப்படியாக அதிகரித்து 2020-21-ம் நிதியாண்டில் ரூ 29,445.72 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

தேசிய சுகாதாரக் கொள்கை 2017-ன் படி, மாநிலங்கள் தங்கள் பட்ஜெட்டில் 8 சதவீதத்தை சுகாதார செலவினங்களுக்காக ஒதுக்க வேண்டும். இதில் மூன்றில் இரண்டு பங்கு ஆரம்ப சுகாதாரச் சேவைகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும். மேலும், வருடத்திற்கு 10 சதவீதம் எனும் அளவுக்கு சுகாதாரத் துறைக்கான செலவை மாநிலங்கள் அதிகரிக்க வேண்டும்.

தமிழ்நாட்டின் கிராமப்புறம் மற்றும் நகர்ப்புறங்களில் 1884 ஆரம்ப சுகாதார நிலையங்களும், 400 சமுதாயச் சுகாதார மையங்களும் 2020 மார்ச் 31-ன் படி செயல்பட்டு வருகின்றன.

நாடு முழுவதும் கிராமப்புறம் மற்றும் நகர்ப்புறங்களில் 30813 ஆரம்ப சுகாதார நிலையங்களும், 5649 சமுதாயச் சுகாதார மையங்களும் 2020 மார்ச் 31-ன் படி செயல்பட்டு வருகின்றன.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1737187

 

----



(Release ID: 1737328) Visitor Counter : 160


Read this release in: English , Marathi