தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்
ஜோஜிலா கணவாய் மற்றும் கார்கில் பகுதியில் தொழிலாளர் சட்டங்கள் மற்றும் புதிய தொழிலாளர் விதிமுறைகளை அமல்படுத்துவது குறித்து தலைமை தொழிலாளர் ஆணையர் ஆய்வு
இடுகை இடப்பட்ட நாள்:
19 JUL 2021 1:45PM by PIB Chennai
கார்கில் மற்றும் ஜோஜிலா கணவாய் பகுதிகளில் தொழிலாளர் சட்டங்களை அமல்படுத்தும் நிலவரம் குறித்து, தலைமை தொழிலாளர் ஆணையர் மற்றும் தொழிலாளர் அலுவலக தலைமை இயக்குனருமான திரு டிபிஎஸ் நெகி இன்று ஆய்வு செய்தார். எல்லை சாலைகள் அமைப்பினர்(பிஆர்ஓ) மற்றும் தேசிய நெடுஞ்சாலை கட்டமைப்பு வளர்ச்சி கழக அதிகாரிகளுடன், பணி நடைபெறும் இடத்திலேயே திரு நெகி ஆய்வு செய்தார். அங்கு நடைபெறும் பல்வேறு நடவடிக்கைகளை அவர் ஆய்வு செய்தார்.
ஜோஜிலா சுரங்கப்பாதை பகுதியில் பணியாற்றும் தொழிலாளர்களை திரு நெகி சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்தார். நாட்டின் தொலைதூர பகுதியில் பணியாற்றும் தொழிலாளர்களின் பிரச்சினைகளை குறித்துக் கொண்ட திரு நெகி, முறை சார்ந்த மற்றும் முறைசாரா தொழிலாளர்களுக்காக மத்திய அரசிடம் உள்ள திட்டங்களை அவர்களுக்கு விளக்கினார். புதிய தொழிலாளர் சட்டங்களை அமல்படுத்துவதன் முக்கியத்துவம் குறித்து, அதிகாரிகள் மற்றும் ஒப்பந்தகாரர்களுக்கு திரு நெகி எடுத்துரைத்தார். புதிய தொழிலாளர் விதிமுறைகளை பின்பற்றுவது தொழிலாளர்களுக்கும், வேலை அளிப்பவர்களுக்கும் வெற்றிகரமான விஷயம் என்பதை அவர் தெளிவுபடுத்தினார்.
தொழிலாளர் அமைச்சகம் விரைவில் தொடங்கவுள்ள என்டியுடபிள்யு இணையதளத்தில், தொழிலாளர்கள் பதிவு செய்து தொழிலாளர் அட்டையை பெற்றுக் கொள்ளும்படி திரு நெகி வேண்டுகோள் விடுத்தார்.
தொழிலாளர்களின் உரிமை பற்றியும், அவர்களின் நலன் மற்றும் பாதுகாப்பில் மத்திய அரசு எப்போதும் அக்கறையுடன் உள்ளது பற்றியும், தொழிலாளர்களுக்கு அவர் விளக்கினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1736711
*****************
(வெளியீட்டு அடையாள எண்: 1736764)
வருகையாளர் எண்ணிக்கை : 287