சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு 41. 69 கோடிக்கும் மேற்பட்ட தடுப்பூசிகள் வழங்கப்பட்டன

Posted On: 17 JUL 2021 11:01AM by PIB Chennai

கொவிட்-19 தடுப்பூசி திட்டத்தை நாடு முழுவதும் விரிவுபடுத்துவதில், மத்திய அரசு உறுதியுடன் உள்ளது

தேசிய தடுப்பூசி திட்டத்தின் ஒரு பகுதியாக, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு கொவிட் தடுப்பூசிகளை மத்திய அரசு இலவசமாக வழங்கி வருகிறது. புதிய தடுப்பூசி திட்டத்தின் கீழ் உற்பத்தி செய்யப்படும் கொவிட் தடுப்பூசிகளில் 75 சதவீதத்தை மத்திய அரசு கொள்முதல் செய்து, இலவசமாக விநியோகிக்கிறது.

இதுவரை மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களுக்கு 41.69 கோடிக்கும் மேற்பட்ட (41,69,24,550)  தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், 18,16,140 டோஸ் தடுப்பூசிகள் மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன.

இவற்றில் இன்று காலை 8 மணி வரை  வீணான தடுப்பூசிகள் உட்பட மொத்தம் 38,94,87,442 டோஸ்கள் காலியாகிவிட்டன.  2.74 கோடிக்கும் மேற்பட்ட (2,74,37,108) கொவிட் தடுப்பூசிகள்மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள்/தனியார் மருத்துவமனைகளிடம் கைவசம் உள்ளன.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1736358

 

-----

 



(Release ID: 1736408) Visitor Counter : 223