விவசாயத்துறை அமைச்சகம்
இந்திய வேளாண் ஆராய்ச்சி குழுவின் 93-வது நிறுவன நாள் காணொலி மூலம் கொண்டாடப்பட்டது
Posted On:
16 JUL 2021 5:57PM by PIB Chennai
இந்திய வேளாண் ஆராய்ச்சி குழுவின் 93-வது நிறுவன நாள் காணொலி மூலம் இன்று கொண்டாடப்பட்டது. மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலன் அமைச்சர் திரு நரேந்திர சிங் தோமர் மற்றும் மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம் அமைச்சர் திரு அஷ்வினி வைஷ்ணவ் ஆகியோர் இணைந்து ‘கிசான் சாரதி’ எனும் டிஜிட்டல் தளத்தை வெளியிட்டனர்.
இதன் மூலம், சரியான நேரத்தில், சரியான தகவல்கள் விவசாயிகள் விரும்பும் மொழிகளில் அவர்களுக்கு கிடைக்கும். நிறுவன தினத்தை முன்னிட்டு, பல்வேறு பிரிவுகளில் விருதுகளை அறிவித்த திரு தோமர், ஐசிஏஆரின் வெளியீடுகளை மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளம் திரு பர்ஷோத்தம் ருபாலா, மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலன் இணை அமைச்சர் திரு கைலாஷ் சவுத்ரி மற்றும் திருமிகு ஷோபா கரன்ட்லாஜே ஆகியோரின் முன்னிலையில் வெளியிட்டார்.
விவசாய சமுதாயத்தின் பல்வேறு சிக்கல்கள் மற்றும் சவால்களை சிறப்பாக தீர்ப்பதற்கான தொழில்நுட்பங்களை உருவாக்குவதற்கான கூட்டு முயற்சி வேண்டும் என்று திரு தோமர் வலியுறுத்தினார். பல்வேறு உணவு பொருட்களின் ஏற்றுமதியாளராக நாட்டை உருவாக்கி, ஊட்டச்சத்து பாதுகாப்பை உறுதி செய்வதற்காக குழு எடுத்து வரும் நடவடிக்கைகளை அவர் பாராட்டினார்.
நாட்டின் 75-வது சுதந்திர தினத்தை கொண்டாடுவதற்கான குழுவால் தொடங்கப்பட்டுள்ள பாரதத்தின் அம்ருத் மகோற்சவத்தில் 400-க்கும் மேற்பட்ட கிரிஷி விக்யான் கேந்திரங்கள் பங்குபெற்றுள்ளதை அவர் குறிப்பிட்டார்.
வேளாண் துறையின் வளர்ச்சிக்காகவும், நாட்டின் விவசாய துறையை மாற்றியமைப்பதற்காகவும் மத்திய அரசு செயல்படுத்தி வரும் விவசாயிகளுக்கு தோழமையான திட்டங்களான லேப்-டு-லேண்டு, ஒவ்வொரு விவசாய நிலத்திற்கும் தண்ணீர், ஒவ்வொரு சொட்டுக்கும் அதிக பயிர் உள்ளிட்ட திட்டங்கள் குறித்து மத்திய அமைச்சர் பேசினார்.
புதிய வேளாண் சட்டங்கள் புரட்சிகரமான மாற்றத்தை விவசாய துறையில் கொண்டு வருவதோடு, விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் மேம்படுத்தும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1736215
*****************
(Release ID: 1736306)
Visitor Counter : 330