தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்

7-வது பிரிக்ஸ் தொழிலாளர் & வேலைவாய்ப்பு அமைச்சர்கள் கூட்டத்திற்கு மத்திய தொழிலாளர் & வேலைவாய்ப்பு அமைச்சர் திரு பூபேந்தர் யாதவ் தலைமை வகித்தார்

Posted On: 15 JUL 2021 6:59PM by PIB Chennai

இந்தியாவின் தலைமையில் இன்று நடைபெற்ற பிரிக்ஸ் தொழிலாளர் & வேலைவாய்ப்பு அமைச்சர்கள் கூட்டத்திற்கு மத்திய தொழிலாளர் & வேலைவாய்ப்பு அமைச்சர் திரு பூபேந்தர் யாதவ் தலைமை வகித்தார். பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய உறுப்பு நாடுகளின் அமைச்சர்கள் கூட்டத்தில் பங்கேற்றனர்.

வரவேற்புரை ஆற்றிய திரு பூபேந்தர் யாதவ், பிரிக்ஸ் உறுப்பு நாடுகளிடையே ஒத்துழைப்பை மேம்படுத்தவும், நீடித்த, ஒருங்கிணைந்த, முழுமையான மற்றும் உற்பத்தி திறன் மிக்க வேலைவாய்ப்பு மற்றும் அனைவருக்கும் கண்ணியமிக்க பணியை ஊக்கப்படுத்தவும் வலியுறுத்தினார்.

தொழிலாளர் சட்டங்களை ஒருங்கிணைத்து, எளிமைப்படுத்தி, அவற்றை நான்கு விதிகளாக (ஊதிய விதி, 2019’, ‘சமூக பாதுகாப்பு விதி 2020’, ‘தொழிற்சாலை உறவுகள் விதி 2020’ மற்றும் பணியிட பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் பணி சூழல் விதி 2020’) மாற்றி வரலாற்று சிறப்புமிக்க சீர்திருத்தங்களை இந்திய அரசு மேற்கொண்டதாக அவர் எடுத்துரைத்தார்.

தொழிலாளர் சந்தையை துடிப்புடன் முறைப்படுத்துதல், தொழிலாளர்களில் பெண்களின் எண்ணிக்கையை அதிகரித்தல், தொழிலாளர் சந்தையில் தற்காலிக மற்றும் சாலையோர பணியாளர்களின் பங்களிப்பை மேம்படுத்துதல் ஆகியவற்றுக்கான ஒருங்கிணைந்த வழிமுறைகளை புதிய தொழிலாளர் சட்டங்கள் வழங்குகின்றன.

பிரிக்ஸ் நாடுகளுக்கிடையே சமுக பாதுகாப்பு ஒப்பந்தங்கள் கையெழுத்திடுவதற்கான தேவை குறித்தும், சர்வதேச புலம்பெயர் தொழிலாளர்கள் நலனை ஊக்குவிப்பது குறித்தும் அமைச்சர் வலியுறுத்தினார்.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1735948

*****************



(Release ID: 1735993) Visitor Counter : 303


Read this release in: English , Urdu , Hindi