வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
மாம்பழங்களின் ஏற்றுமதியை ஊக்குவிக்கும் திட்டம்: வட இந்திய வகைகள் துபாயில் காட்சிப்படுத்தல்
Posted On:
15 JUL 2021 5:38PM by PIB Chennai
கொவிட்- 19 பெருந்தொற்றால் ஏற்பட்ட சவால்களுக்கு இடையேயும் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளிலிருந்து இந்தப் பருவகாலத்தில் மாம்பழத்தின் ஏற்றுமதியை இந்தியா ஊக்குவித்து வருகிறது.
இந்த முன்முயற்சியின் ஒரு பகுதியாக, வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு ஏற்றுமதி வளர்ச்சி ஆணையமான அபெடா, இந்திய தூதரகம் மற்றும் இறக்குமதியாளரான லூலூ குழுமத்துடன் இணைந்து வடகிழக்கு இந்தியாவைச் சேர்ந்த மாம்பழ வகைகளை ஊக்குவிக்கும் நிகழ்ச்சியை துபாயில் இன்று நடத்தியது.
உத்தரப் பிரதேச மண்டி வாரியத்துடன் ஒருங்கிணைந்து பெறப்பட்ட சௌசா மற்றும் லாங்க்ரா வகை மாம்பழங்கள் ஐக்கிய அரபு அமீரகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
இந்தியாவின் கிழக்குப் பகுதியில் இருந்து மத்திய கிழக்கு நாடுகளுக்கு மாம்பழங்களின் ஏற்றுமதியை ஊக்குவிக்கும் முயற்சியாக புவியியல் குறியீட்டு அங்கீகாரம் பெற்றுள்ள ஃபாசில் ரக மாம்பழம் அண்மையில் பஹ்ரைனுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது. அபெடாவில் பதிவு செய்துள்ள கொல்கத்தாவைச் சேர்ந்த டிஎம் என்டர்பிரைசஸ் நிறுவனம், பஹ்ரைன் நாட்டின் அல்ஜசீரா குழுமத்திற்கு இந்த மாம்பழங்களை ஏற்றுமதி செய்தது.
அபெடா சார்பாக சமீபத்தில் டோஹா, கத்தார் நாடுகளில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஒன்பது வகையான மாம்பழங்கள் காட்சிப்படுத்தப்பட்டன.
ஜெர்மனி நாட்டின் பெர்லின் நகரத்தில் மாம்பழ திருவிழாவிற்கும் அபெடா ஏற்பாடு செய்திருந்தது.
தென் கொரியாவிற்கு மாம்பழங்களின் ஏற்றுமதியை அதிகரிப்பதற்காக சியோலில் உள்ள இந்திய தூதரகம் மற்றும் இந்திய வர்த்தக சங்கத்துடன் இணைந்து முன்னதாக கொரியாவில் காணொலி வாயிலான நுகர்வோர்- விற்பனையாளர் கூட்டத்தை அபெடா நடத்தியது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1735899
*****************
(Release ID: 1735946)
Visitor Counter : 320