சுரங்கங்கள் அமைச்சகம்

மே 2021-ல் தாதுக்கள் உற்பத்தி (தற்காலிகமானது)

Posted On: 14 JUL 2021 7:15PM by PIB Chennai

சுரங்கம் மற்றும் குவாரி துறையில் தாது உற்பத்திக்கான 2021 மே மாதத்திற்கான குறியீடு (அடிப்படை: 2011-12=100), 2020 மே மாதத்துடன் ஒப்பிடும்போது 23.3 சதவீதம் அதிகமாக உள்ளது.

2020-21 ஏப்ரல்-மே காலகட்டத்தில் ஒட்டுமொத்த வளர்ச்சி முந்தைய வருடத்துடன் ஒப்பிடும்போது 29.4 சதவீதமாக அதிகரித்துள்ளது.

2021 மே மாதத்தில் முக்கிய தாதுக்களின் உற்பத்தி அளவு வருமாறு: நிலக்கரி 532 லட்சம் டன்கள், பழுப்பு நிலக்கரி 31 லட்சம் டன்கள், இயற்கை எரிவாயு (பயன்படுத்தப்பட்டது) 2660 மில்லியன் கியூபிக் மீட்டர், பெட்ரோலியம் (கச்சா) 24 லட்சம் டன்கள், பாக்சைட் 1643 ஆயிரம் டன்கள், குரோமைட் 436 ஆயிரம் டன்கள், திட தாமிரம். 10 ஆயிரம் டன்கள் , தங்கம் 31 கிலோ, இரும்புத் தாது 234 லட்சம் டன்கள், திட லீட் 26 ஆயிரம் டன்கள், மாங்கனீஸ் தாது 223 ஆயிரம் டன்கள், திட துத்தநாகம் 112 ஆயிரம் டன்கள், சுண்ணாம்பு 322 லட்சம் டன்கள், பாஸ்போரைட் 117 ஆயிரம் டன்கள், மாக்னிசைட் 7 ஆயிரம் டன்கள் மற்றும் வைரம் 0 காரட்.            

2020 மே உடன் ஒப்பிடும்போது 2021 மே மாதத்தில் நேர்மறை வளர்ச்சியை காட்டும் முக்கிய தாதுக்களின் உற்பத்தி வருமாறு:

திட தாமிரம் (120.4%), இயற்கை எரிவாயு (பயன்படுத்தப்பட்டது) (20.1%), மாக்னிசைட் (19.6%), மாங்கனீஸ் தாது (16.9%), இரும்புத்தாது (1.3%),

 

எதிர்மறை வளர்ச்சியை காட்டும் இதர முக்கிய தொழில் உற்பத்தி விவரங்கள் பின்வருமாறு:

திட துத்தநாகம் (-0.5%), பாக்சைட் (-1.5%), பாஸ்போரைட் (-2.1%), பெட்ரோலியம் (கச்சா) (-6.3%), பழுப்பு நிலக்கரி (-6.3%), சுண்ணாம்பு (-8.6%), திட லீட் (-13.7%), குரோமைட் (-19.7) மற்றும் தங்கம் (-78.3%).

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1735580

*****************



(Release ID: 1735632) Visitor Counter : 165


Read this release in: English , Urdu , Hindi