அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

ரசாயன தூண்டுதல்களுக்கு எதிராக குடல் பாக்டீரியாவின் குணாதிசயம் குறித்து விஞ்ஞானிகள் ஆய்வு

Posted On: 14 JUL 2021 6:16PM by PIB Chennai

ஈ-கோலி என்றழைக்கப்படும் மனித குடலிலுள்ள பாக்டீரியா, ரசாயனங்களிடமிருந்து எவ்வாறு விலகி செல்கிறது அல்லது எவ்வாறு ரசாயனங்களை நோக்கி செல்கிறது என்பது குறித்த கீமோடாக்சிஸ் எனும் மர்மமான செயல்பாடு விஞ்ஞானிகளுக்கு நீண்டகாலமாக புதிராக விளங்கி வந்தது. 

மனித இரைப்பை குடலில் உள்ள பல்வேறு ரசாயனங்களுக்கு எதிராக கீமோடாக்சிசை

ஈ-கோலி பாக்டீரியா செயல்படுத்தி வந்தது. சிறந்த கீமோடாக்சிஸ் செயல்பாட்டை உருவாக்குவதற்கான காரணியை விஞ்ஞானிகள் தற்போது கண்டுபிடித்துள்ளனர்.

ரசாயன தூண்டுதல்களுக்கு எதிரான குடல் பாக்டீரியாவின் குணாதிசயம் மனித குடலின் செயல்பாட்டுக்கு முக்கியம் என்பதால் ரசாயன சிக்னல்களுக்கு எதிரான, ஈ-கோலி பாக்டீரியாவின் செயல்பாடுகளை கண்காணிக்க இந்த புதிய கண்டுபிடிப்பு உதவும்.

இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் கீழ் இயங்கும் தன்னாட்சி பெற்ற ஆராய்ச்சி நிறுவனமான எஸ் என் போஸ் தேசிய அடிப்படை அறிவியல் மையத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் தங்களது சமீபத்திய ஆய்வில் மேற்கண்டவற்றை கண்டறிந்துள்ளனர். திருமிகு சகுந்தலா சாட்டர்ஜி தலைமையிலான ஆராய்ச்சிக் குழு இதை செய்துள்ளது.

வெளியிட்டு விவரம்: https://doi.org/10.1103/PhysRevE.103.L030401

மேலும் விவரங்களுக்கு, sakuntala.chatterjee@bose.res.in எனும் மின்னஞ்சல் முகவரியில் திருமிகு சகுந்தலா சாட்டர்ஜியை தொடர்பு கொள்ளலாம்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1735516

*****************



(Release ID: 1735604) Visitor Counter : 185


Read this release in: English , Urdu , Hindi