புவி அறிவியல் அமைச்சகம்

தில்லி உட்பட நாடு முழுவதும் பரவியுள்ளது தென்மேற்கு பருவமழை

Posted On: 13 JUL 2021 3:56PM by PIB Chennai

தென்மேற்கு பருவமழை மேலும் முன்னேறி, ஜூலை 13ம் தேதி அன்று, தில்லி உட்பட நாடு முழுவதும் பரவியுள்ளது என  இந்திய வானிலைத்துறை தெரிவித்துள்ளது. இதன் இயல்பான தேதி ஜூலை 8.

வங்காள விரிகுடாவில் இருந்து கிழக்கு நோக்கி கீழ்மட்டத்தில்  வீசும் ஈரப்பதமான காற்று காரணமாக கடந்த 4 நாட்களில் மேகம் அதிகரித்து பரவலாக மழை பெய்தது.

தென்மேற்கு பருவமழை இன்று தில்லிக்கு முன்னேறியுள்ளது. இதன் வழக்கமான தேதி ஜூன் 27.

நாட்டில் சமீப காலங்களில், பருவமழை இயல்பான தேதியை விட முன்கூட்டியே வந்த தேதிகள் கீழ்கண்ட அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளன.

நேற்று காலை 8.30 மணி முதல், இன்று காலை 8.30 மணிவரை நாட்டின் பல பகுதிகளில் பெய்த மழையளவு (செ.மீ-ல்):

சப்தர்ஜங் -2.5, அயனகர் -11.3, பாலம் -2.4, சி.எச்.ஓ லோதி சாலை -0.9, ரிட்ஜ் -1.0, குர்கிராம் -51, ஃபரிதாபாத் -2.8, பானிபாத் -1.0, ரோஹ்தக் -2.2, ஹிசார் -3.3, ஃபதேஹாபாத்-3.0, ஜெய்சால்மர் -7.7, பிகானேர் -6.8, சுரு -9.0.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1735073

*****************



(Release ID: 1735103) Visitor Counter : 260


Read this release in: English , Urdu , Hindi , Punjabi