எஃகுத்துறை அமைச்சகம்

செய்ல், என் எம் டி சி மற்றும் மீகான் ஆகியவற்றின் செயல்பாடுகளை எஃகு அமைச்சர் திரு ராம் சந்திர பிரசாத் சிங் ஆய்வு செய்தார்

இடுகை இடப்பட்ட நாள்: 12 JUL 2021 6:57PM by PIB Chennai

செய்ல் நிறுவனத்தின் தலைவர் மற்றும் என் எம் டி சி மற்றும் மீகான் நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் நிர்வாக இயக்குநர்களுடன், மேற்கண்ட பொதுத்துறை நிறுவனங்களின் செயல்பாடுகளை ஆய்வு செய்வதற்கான காணொலி கூட்டத்தை மத்திய எஃகு அமைச்சர் திரு ராம் சந்திர பிரசாத் சிங் இன்று நடத்தினார்.

நிறுவனங்கள், தற்போதைய செயல்பாடுகள், திட்டங்கள், நிதி செயல்பாடு மற்றும் எதிர்கால திட்டங்கள் குறித்த விளக்கங்களை தலைவர்கள் மற்றும் நிர்வாக இயக்குனர்கள் அமைச்சரிடம் வழங்கினர். செயல்பாடுகளை ஆய்வு செய்த அமைச்சர், இந்திய எஃகு துறைக்கு மத்திய பொதுத்துறை நிறுவனங்கள் ஆற்றிவரும் பங்களிப்பு குறித்து பாராட்டு தெரிவித்ததோடு, மத்திய பொதுத்துறை நிறுவனங்களின் எதிர்கால திட்டங்கள் குறித்த தமது கருத்துகளையும் பகிர்ந்துக் கொண்டார்.

பொதுத்துறை நிறுவனங்கள் துறையின் வழிகாட்டுதலின்படி ஊதிய மறுநிர்ணய நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு நிறுவனங்களை கேட்டுக் கொண்ட அமைச்சர், நில ஆக்கிரமிப்பு, வழக்குகள் உள்ளிட்டவற்றுக்கு தீர்வு காணுமாறும் உலகத் தரத்திலான தண்டவாளங்களை குறைந்த விலையில் இந்திய ரயில்வேக்கு வழங்குமாறும் நிறுவனங்களை கேட்டுக்கொண்டார்.

தனது எதிர்கால ஆய்வு நடவடிக்கைகள் குறித்து என் எம் டி சி அமைச்சருக்கு எடுத்துரைத்தது. பல்வேறு துறைகளில் மீகானின் பணி குறித்து அமைச்சர் மகிழ்ச்சி தெரிவித்தார்.

தங்களது வணிக செயல்பாடுகளை ஒருங்கிணைத்து சந்தையில் போட்டித்தன்மையோடு விளங்குமாறு மத்திய பொதுத்துறை நிறுவனங்களை அமைச்சர் அறிவுறுத்தினார்.

 

-----

 


(வெளியீட்டு அடையாள எண்: 1734898) வருகையாளர் எண்ணிக்கை : 265
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Punjabi