புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கம் அமைச்சகம்

2021 மே மாதத்திற்கான தொழில் உற்பத்திக் குறியீடு மற்றும் உபயோகம்-சார்ந்த குறியீட்டின் துரித மதிப்பீடுகள் (அடிப்படை 2011-12=100)

Posted On: 12 JUL 2021 5:30PM by PIB Chennai

தொழில் உற்பத்திக் குறியீட்டின் (IIP) விரைவு மதிப்பீடுகள், ஆறு வாரங்கள் இடைவெளியுடன் ஒவ்வொரு மாதத்தின் 12-ம் தேதியன்று (அல்லது அதற்கு முந்தைய வேலை நாளன்று), ஆதார முகமைகளிடம் இருந்து பெறப்பட்டத் தகவல்களின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டு வெளியிடப்படும். தயாரிப்புத் தொழிற்சாலைகள்/நிறுவனங்களிடம் இருந்து இந்தத் தகவல்கள் ஆதார முகமைகளுக்குக் கிடைக்கும்.

மே 2021-க்கான  தொழில் உற்பத்திக் குறியீட்டின் (IIP) விரைவு மதிப்பீடு,  2011-12-க்கான அடிப்படையில் 116.6 ஆக இருக்கிறதுசுரங்கங்கள், உற்பத்தி மற்றும் மின்சாரத் துறைகளின் 2021 மே  மாதத்திற்கான தொழில் உற்பத்தி குறியீடுகள் முறையே 108.0, 113.5 மற்றும் 161.9 ஆக உள்ளன.

தொழில் உற்பத்திக் குறியீட்டின் திருத்தக் கொள்கையின் படி இந்த துரித மதிப்பீடுகள் இனிவரும் அறிக்கைகளில் மாற்றங்களைக் காணும்.

உபயோகம் சார்ந்த வகைப்பாட்டின் படி, அடிப்படை சரக்குகளுக்கான குறியீடு 122.7 என்ற அளவிலும், மூலதன சரக்குகளுக்கான குறியீடு 65.6 ஆகவும், இடைநிலை சரக்குகளுக்கான குறியீடு 129.9 என்ற அளவிலும், உள்கட்டமைப்பு/கட்டுமான சரக்குகளுக்கான குறியீடு 129.8 ஆகவும் 2021 மே மாதத்தில் இருந்தது.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைப் படிக்கவும்:https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1734815

 

----



(Release ID: 1734843) Visitor Counter : 180


Read this release in: English , Urdu , Hindi , Punjabi