வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்

வாரணாசியிலிருந்து வேளாண் பொருட்களின் ஏற்றுமதியை ஊக்குவிப்பதற்கான கூட்டம்: அபெடா ஏற்பாடு

Posted On: 10 JUL 2021 10:57AM by PIB Chennai

சர்வதேச நடைமுறைகளுக்கு உட்பட்டு, வேளாண் பொருட்களின் ஏற்றுமதியை ஊக்குவிப்பதற்காக வேளாண் உற்பத்தி நிறுவனங்கள், வர்த்தகர்கள், ஏற்றுமதியாளர்கள், வேளாண் விஞ்ஞானிகள், உத்தரப் பிரதேச அரசு மற்றும் இதர நிறுவனங்களுடன் இணைந்து வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு ஏற்றுமதி வளர்ச்சி ஆணையமான அபெடா வாரணாசியில் இன்று ஓர் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தது.

விவசாயிகளால், சிறந்த விவசாய நடைமுறை என்ற சர்வதேச அங்கீகாரம் பெற்றுள்ள நடைமுறைகளுக்கு உட்பட்டு, அந்தப் பகுதியிலிருந்து வேளாண் பொருட்களை ஏற்றுமதி செய்வது தொடர்பாக வேளாண் விஞ்ஞானிகள் மற்றும் முன்னணி நிறுவனங்களைச் சேர்ந்த அதிகாரிகள் அளித்த பயனுள்ள தகவல்களை, வாரணாசியைச் சேர்ந்த சுமார் 200 பெற்று பயனடைந்தனர்.

கிழக்கு உத்தரப் பிரதேச பகுதியிலிருந்து வேளாண் ஏற்றுமதியை அதிகரிப்பதற்காக பூச்சிக்கொல்லி மருந்து இல்லாத விளைச்சலை உறுதிப்படுத்துதல், தொழில்நுட்ப தகவல்கள், பசுமையான பழங்கள் மற்றும் காய்கறிகளில் நோயைக் கண்டறிவது போன்றவை குறித்து எடுத்துரைக்கப்பட்டது.

வேளாண் ஆராய்ச்சிக்கான இந்திய கவுன்சில் (ஐசிஏஆர்)- மிதவெப்ப மண்டல தோட்டக்கலைக்கான மத்திய நிறுவனம், ஐசிஏஆர்- இந்திய மண் அறிவியல் நிறுவனம், ஐசிஏஆர்- இந்திய காய்கறிகள் ஆராய்ச்சி நிறுவனம், சர்வதேச அரிசி ஆராய்ச்சி நிறுவனம்- தெற்கு ஆசிய மண்டல மையம், நரேந்திர தேவ் வேளாண் மற்றும் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம், கிரிஷி விக்யான் மையங்கள், உத்தரப் பிரதேச மாநில வேளாண் மற்றும் தோட்டக்கலைத் துறைகள் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டன.

நபார்டு, நஃபேட் போன்ற அமைப்புகளைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் இதில் கலந்துக்கொண்டு, தங்களது துறை ரீதியான திட்டங்கள் குறித்து விவசாயிகளுக்கு விளக்கமளித்தனர்.

வாழைப்பழங்களின் ஏற்றுமதி பற்றி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சிறப்பு அமர்வில் அபெடாவில் பதிவு செய்யப்பட்டுள்ள ஏற்றுமதியாளர், வாழைப்பழங்களை பதப்படுத்துதல் பற்றி பங்கேற்பாளர்களுக்கு எடுத்துரைத்தார்.

75-வது சுதந்திர ஆண்டை முன்னிட்டு விடுதலையின் அம்ருத் மகோத்சவம் என்ற பெயரில் அரசு மேற்கொண்டுள்ள முன்முயற்சியின் கீழ் நடைபெற்று வரும் தொடர் நிகழ்வுகளின் ஒரு பகுதியாக வாரணாசியில் இந்தக் கூட்டம் நடைபெற்றது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1734374

----

 


(Release ID: 1734422) Visitor Counter : 258


Read this release in: English , Urdu , Hindi , Bengali