வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம்

அனைத்தையும் உள்ளடக்கிய நகரங்களுக்கான மையத்தின் தொடக்கத்தைக் குறிக்கும் வகையில் இணைய கருத்தரங்கை தேசிய நகர்ப்புற விவகாரங்கள் நிறுவனம் நடத்தியது

Posted On: 09 JUL 2021 3:08PM by PIB Chennai

அனைத்தையும் உள்ளடக்கிய நகரங்களுக்கான மையம் கடந்த மாதம் தொடங்கப்பட்டதை குறிக்கும் வகையில் 'அனைத்தையும் உள்ளடக்கிய நகரங்கள்: இந்திய நகரங்களை மேலும் அணுகக்கூடியவையாக, பாதுகாப்பானவையாக, அனைவருக்கும் ஏற்றவையாக மாற்றுவதற்கான வழிமுறைகள்' எனும் தலைப்பில் இணைய கருத்தரங்கை தேசிய நகர்ப்புற விவகாரங்கள் நிறுவனம் நடத்தியது.

தேசிய நகர்ப்புற விவகாரங்கள் நிறுவனத்தின் 45-வது ஆண்டு விழாவின் ஒரு பகுதியாக இந்த இணைய கருத்தரங்கம் அமைந்தது. அனைத்தையும் உள்ளடக்கிய தன்மையை பரவலாக்குவது குறித்த விவாதங்களை உருவாக்குவதையும், சிந்தனையாளர்கள், செயல்பாட்டாளர்கள், ஆராய்ச்சியாளர்கள், துறைரீதியான வல்லுநர்கள் ஆகியோர்களை ஈடுபடுத்தி அனைத்து நகரங்களிலும் உகந்த சூழ்நிலையை ஏற்படுத்துவதையும் இந்த இணைய கருத்தரங்கம் நோக்கமாக கொண்டிருந்தது.

தேசிய நகர்ப்புற விவகாரங்கள் நிறுவனத்தின் மூத்த ஆலோசகர் திரு அஜய் சூரி, மையத்தின் யுக்திகளையும் அடுத்த 5 ஆண்டுகளுக்கான செயல்திட்டங்களையும் விவரித்தார். ஜி ஐ இசட் இந்தியாவின் நீடித்த நகர்புறம் மற்றும் தொழில் வளர்ச்சியின் குழு ஒருங்கிணைப்பாளர் திரு எர்னெஸ்ட் டோரிங், ஒருங்கிணைந்த வளர்ச்சியை உருவாக்குவதற்காக ஜி ஐ இசட் இந்தியா மற்றும் தேசிய நகர்ப்புற விவகாரங்கள் நிறுவனம் ஆகியவற்றுக்கு இடையேயான கூட்டு குறித்து பேசினார்.  

தேசிய நகர்ப்புற விவகாரங்கள் நிறுவனத்தில் உருவாக்கப்பட்டுள்ள அனைத்தையும் உள்ளடக்கிய நகரங்களுக்கான மையம், ஒருங்கிணைப்பை ஊக்கப்படுத்துவதற்கு நகர அதிகாரிகளுக்கு தேவையான உபகரணங்கள் மற்றும் செயல்திட்டங்களை உருவாக்குவதை நோக்கமாக கொண்டுள்ளது. சர்வதேச சிறந்த நகரங்களின் நல்ல நடைமுறைகளை பகிர்வதற்காக தகவல் களஞ்சியம் ஒன்றும் திட்டமிடப்பட்டுள்ளது.

வாழ்க்கை தரம் மற்றும் அனைவருக்குமான செயல்திறனை  மேம்படுத்துவதற்கு தேவையான ஆதாரம் சார்ந்த திட்டங்கள் மற்றும் முதலீடுகளுக்கான வசதிகளை இந்த மையம் வழங்கும். நகர்ப்புற ஏழைகள், மாற்றுத்திறனாளிகள், பெண்கள், குழந்தைகள், இளைஞர்கள் மற்றும் மூத்த குடிமக்கள் உள்ளிட்ட மிகவும் பாதிக்கப்படக்கூடிய பிரிவுகள் மீது இது கவனம் செலுத்தும். இடம் சார்ந்த, சமூக, பொருளாதார மற்றும் டிஜிட்டல் உள்ளடக்கம் ஆகியவற்றில் நகரங்களில் உள்ள சவால்களை எதிர்கொள்ள தேவையான நடவடிக்கைகளை இம்மையம் மேற்கொள்ளும்.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1734202

*****************


(Release ID: 1734313) Visitor Counter : 246


Read this release in: English , Urdu , Hindi