சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்களுக்கு 37.93 கோடி தடுப்பூசி டோஸ்கள் வழங்கப்பட்டன

Posted On: 08 JUL 2021 1:25PM by PIB Chennai

மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு இதுவரை 37.93 கோடிக்கும் மேற்பட்ட கொவிட் தடுப்பூசி டோஸ்களை வழங்கியுள்ளது.

நாடு முழுவதும் கொவிட் தடுப்பூசி திட்டம் விரைவு படுத்தப்பட்டுள்ளது. மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கும் கிடைக்கும் தடுப்பூசி டோஸ்கள் முன்கூட்டியே தெரிவிக்கப்படுகின்றன.

தேசிய தடுப்பூசி திட்டத்தின் ஒரு பகுதியாக, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு இலவசமாக கொவிட் தடுப்பூசிகளை வழங்கி வருகிறது. புதிய தடுப்பூசி திட்டத்தில், உற்பத்தி செய்யப்படும் தடுப்பூசிகளில் 75 சதவீதத்தை, மத்திய அரசு கொள்முதல் செய்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இலவசமாக விநியோகிக்கிறது.

இதுவரை 37.93 கோடிக்கும் (37,93,56,790) மேற்பட்ட தடுப்பூசி டோஸ்கள் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. மேலும், 23,80,000 டோஸ்கள் வழங்கப்படவுள்ளனன்று காலை 8 மணி வரை, வீணான தடுப்பூசிகள் உட்பட 36,09,69,128 டோஸ்கள் காலியாகியுள்ளன

இன்னும் 1.83 கோடி தடுப்பூசி டோஸ்கள் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் மற்றும் தனியார் மருத்துவமனைகளிடம் உள்ளன.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1733622

 

------


(Release ID: 1733730)