அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
வாய்ப்புற்று நோய் மரபணு மாறுபாடுகள் குறித்த உலகின் முதல் தகவல் தொகுப்பை தேசிய உயிரி மருத்துவ மரபணுவியல் நிறுவனம் உருவாக்கியுள்ளது
प्रविष्टि तिथि:
07 JUL 2021 7:22PM by PIB Chennai
வாய்ப்புற்று நோய் மரபணு மாறுபாடுகள் குறித்த உலகின் முதல் தகவல் தொகுப்பை, இந்திய அரசின் உயிரி தொழில்நுட்பத் துறையின் நிதி உதவி பெறும் தன்னாட்சி பெற்ற அமைப்பான
உயிரி தொழில்நுட்பத் துறை-தேசிய உயிரி மருத்துவ மரபணுவியல் நிறுவனம், கல்யாணி உருவாக்கியுள்ளது.
அனைவரும் அணுகக்கூடிய வகையில் இந்த தரவு தொகுப்பை உயிரி தொழில்நுட்பத் துறை-தேசிய உயிரி மருத்துவ மரபணுவியல் நிறுவனம் வைத்துள்ளது. இணையம் மூலம் இந்த இலவச தகவல்களை யார் வேண்டுமானாலும் பார்க்க முடியும்.
அறிவியல் சமூகத்தால் ஒப்புதல் அளிக்கப்பட்ட சிறந்த நடைமுறைகளை பயன்படுத்தி வாய்ப்புற்று நோய் மரபணு மாறுபாடுகள் கண்டறியப்பட்டுள்ளன.
வாய்ப்புற்று நோய் மரபணு மாறுபாடுகள் தகவல் தொகுப்பில் சக்திவாய்ந்த தேடு இயந்திரம் உள்ளது. புள்ளியியல் மற்றும் உயிரி தகவல் பகுப்பாய்வு செய்யவும் இது அனுமதிக்கிறது.
வருடந்தோறும் புதுப்பிக்கப்படவிருக்கும் இந்த தகவல் தொகுப்பை http://research.nibmg.ac.in/dbcares/dbgenvoc/ என்ற முகவரியில் காணலாம்.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைப் பார்க்கவும்:https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1733448
------
(रिलीज़ आईडी: 1733510)
आगंतुक पटल : 357