அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
எலும்பு திசு மறு உருவாக்கத்திற்கு தேவையான உயிரிப் பொருட்களை அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை ஆதரவு பெற்ற நிபுணர் உருவாக்குகிறார்
Posted On:
07 JUL 2021 6:41PM by PIB Chennai
எலும்பு திசு மறு உருவாக்கத்திற்கு தேவையான உயிரிப் பொருட்களை அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை ஆதரவு பெற்ற நிபுணரான, சாவித்திரிபாய் பூலே புனே பல்கலைக்கழகத்தை சேர்ந்த டாக்டர் கீதாஞ்சலி தோமர் உருவாக்கியுள்ளார். தங்க நானோ துகள்களையும் அவர் உருவாக்கியுள்ளார்.
திசு மறு உருவாக்கத்திற்கு பொருத்தமான தண்டு செல்கள் மீது டாக்டர் கீதாஞ்சலியின் ஆய்வகம் கவனம் செலுத்துகிறது. அதே சமயம், சில முக்கிய எலும்பு குறைபாடுகளுக்கு தேவையான மருத்துவ செயல்பாடுகளின் மீதும் பணிகள் நடைபெறுகின்றன.
மண்டை ஓடு மற்றும் முக எலும்புகளுக்கான திசு பொறியியல் பொருட்கள் மற்றும் தொழில்நுட்பங்கள் மீதான ஆய்வின் தற்போதைய நிலவரம் குறித்து அவரது சமீபத்திய கட்டுரை ஒன்றில் டாக்டர் கீதாஞ்சலி குறிப்பிட்டிருந்தார்.
முன்னேறிய பொருட்கள், நானோ உயிரித் தொழில்நுட்பம், செல் உயிரியல், கணினி உதவி பெற்ற தொழில்நுட்பங்கள், இயந்திரவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவு உபகரணங்கள் உள்ளிட்டவற்றின் மூலம் செய்யப்படும் பணிகள் குறித்து அவரது குழு எடுத்துரைத்திருந்தது.
அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையால் நிறுவப்பட்ட இன்ஸ்பையர் ஊக்கத்தொகையை பெறும் இந்தியாவில் உள்ள ஒரு சில ஆய்வகங்களில் இதுவும் ஒன்றாகும்.
மேலும் விவரங்களுக்கு, டாக்டர் கீதாஞ்சலி தோமரை geetanjalitomar13[at]gmail[dot]com; joshigeet[at]gmail[dot]com ஆகிய மின்னஞ்சல்கள் மூலம் தொடர்பு கொள்ளலாம்.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைப் பார்க்கவும்:https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1733433
-----
(Release ID: 1733490)
Visitor Counter : 282