மத்திய பணியாளர் தேர்வாணையம்

பாதுகாப்பு அகாடமி மற்றும் கடற்படை அகாடமி தேர்வு(II): இறுதி முடிவுகள் வெளியீடு

Posted On: 07 JUL 2021 5:12PM by PIB Chennai

தேசிய பாதுகாப்பு அகாடமியின் 146-வது பாடநெறிக்கான இராணுவம், கடற்படை மற்றும் விமான படையில் சேர்வதற்கும், 108-வது இந்திய கடற்படை அகாடமி பாடநெறிக்கான கடற்படை அகாடமியில் சேர்வதற்கும் கீழ்காணும் 478 விண்ணப்பதாரர்கள் மத்திய அரசுப் பணியாளர் தேர்வு ஆணையம் கடந்த செப்டம்பர் 6-ஆம் தேதி நடத்திய தேசிய எழுத்துத் தேர்வு மற்றும் அதை தொடர்ந்து பாதுகாப்பு அமைச்சகத்தின் சேவைகள் தேர்வு வாரியம் நடத்திய நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மேற்குறிப்பிட்ட பாடநெறி தொடங்கும் தேதி மற்றும் இதர விவரங்கள் பற்றி அறிய www.joinindianarmy.nic.in, www.joinindiannavy.gov.in, http://www.careerindianairforce.cdac.in/ ஆகிய மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் இணையதளங்களைக் காணலாம்.

இந்தப் பட்டியலைத் தயாரிப்பதில் மருத்துவத் தேர்வின் முடிவுகள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை.

தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்கள், தங்களது பிறப்பு மற்றும் கல்வி சான்றிதழ்களை பாதுகாப்பு அமைச்சகத்தின் (ராணுவம்) பணி அமர்த்தலுக்கான கூடுதல் தலைமை இயக்குநரிடம் நேரடியாக வழங்க வேண்டும்.

இந்த முடிவு மத்திய அரசு பணியாளர் தேர்வு ஆணையத்தின் இணையதளத்திலும் (http://www.upsc.gov.in/) வெளியிடப்பட்டுள்ளது. எனினும் விண்ணப்பதாரர்களின் மதிப்பெண், இறுதி முடிவு வெளியிடப்பட்டதிலிருந்து 15 நாட்களுக்கு பிறகே இணையதளத்தில் வெளியிடப்படும்.

முடிவுகளை இங்கே காணலாம்:

https://static.pib.gov.in/WriteReadData/specificdocs/documents/2021/jul/doc20217731.pdf

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1733395

----



(Release ID: 1733450) Visitor Counter : 174