சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
பஞ்சாபில் சுமார் 1105 மாற்றுத் திறனாளிகளுக்கு உதவிப் பொருட்களை இலவசமாக வழங்கும் முகாம்: மத்திய அமைச்சர் திரு கிருஷண் பால் குர்ஜார் தொடங்கிவைத்தார்
Posted On:
03 JUL 2021 4:13PM by PIB Chennai
பஞ்சாபின் மான்ஸா மாவட்டத்திலுள்ள பரேதா நகரில், கண்டறியப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு வட்டார அளவில் உதவிப் பொருட்கள் வழங்கும் முகாமை மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் இணை அமைச்சர் திரு கிருஷண் பால் குர்ஜார் காணொலிக் காட்சி மூலம் தொடங்கி வைத்தார். ஃபரிதாபாத்தில் இருந்து காணொலிக் காட்சி வாயிலாக இணை அமைச்சர் இந்த நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், பிரதமரின் தலைமையின் கீழ் மாற்றுத் திறனாளிகளுக்குத் தேவையான நல உதவிகளை வழங்குவதில் இந்தத் துறை தொடர்ந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்தார். மாற்றுத்திறனாளிகளின் நல்வாழ்விற்காக மத்திய அரசு அமல்படுத்தி வரும் நலத்திட்டங்கள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும், சமுதாயத்தில் பெருவாரியான மக்களுக்கு இணையாக மாற்றுத்திறனாளிகளுக்கும் அதிகாரம் அளிப்பதற்காகவும் இதுபோன்ற முகாம்கள் நடத்தப்பட்டு வருவதாக அவர் கூறினார்.
மன்ஸா மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகாரமளித்தல் துறையின் இந்திய செயற்கை மூட்டுக் கருவிகள் உற்பத்தி நிறுவனம் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது. கொவிட் நடத்தை விதிமுறைகளைப் பின்பற்றி இந்த முகாம் நடைபெற்றது.
கைகளால் இயக்கும் மூன்று சக்கர மிதி வண்டிகள் 375, 143 சக்கர நாற்காலிகள், 430 ஊன்றுகோல்கள், 111 கைத்தடிகள், 15 ரோலேட்டர்கள், 4 சீர்மிகு கைத்தடிகள், கண் பார்வையற்றவர்களுக்கு உதவும் சிறப்பு தொலைபேசிகள் 5, 957 காது கேட்கும் கருவிகள் உள்ளிட்டவை பல்வேறு கட்டங்களாக மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்படவுள்ளன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1732503
-----
(Release ID: 1732525)
Visitor Counter : 212