மத்திய பணியாளர் தேர்வாணையம்
தேசிய பாதுகாப்பு அகாடமி மற்றும் கடற்படை அகாடமி தேர்வு(I) முடிவுகள்-2021
प्रविष्टि तिथि:
30 JUN 2021 4:44PM by PIB Chennai
மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம்(யுபிஎஸ்சி) கடந்த ஏப்ரல் 18ம் தேதி நடத்திய தேசிய பாதுகாப்பு அகாடமி மற்றும் கடற்படை அகாடமி எழுத்து தேர்வு(I) அடிப்படையில் கீழ்கண்ட பதிவு எண்கள், பாதுகாப்பு படைகள் தேர்வு வாரியத்தின்(எஸ்எஸ்பி) நேர்காணலுக்கு தகுதி பெற்றுள்ளனர். இதற்கான நேர்காணல் 2022 ஜனவரி 2ம் தேதி தொடங்குகிறது. இந்த முடிவுகளை மத்திய அரசுப் பணியார் தேர்வாணையத்தின் இணையதளம் www.upsc.gov.in-ல் பார்க்கலாம். இந்த பட்டியலில் உள்ள விண்ணப்பதாரர்களின் எண்கள் தற்காலிகமானவை.
எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், முடிவுகள் வெளியான 2 வாரத்துக்குள், இந்திய ராணுவத்தின் இணையதளத்தில் joinindianarmy.nic.in பதிவு செய்ய வேண்டும். அதன்பின்பு வெற்றி பெற்றவர்களுக்கு நேர்காணலுக்கான தேர்வு மையம் மற்றும் தேதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, பதிவு செய்யப்பட்ட இ-மெயில் முகவரிக்கு தெரிவிக்கப்படும்.
நேர்காணலின் போது ஒரிஜினல் சான்றிதழ்கள் சமர்ப்பிக்க வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1731479
*****************
(रिलीज़ आईडी: 1731668)
आगंतुक पटल : 362