சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களுக்கு 32.12 கோடி கொவிட் தடுப்பூசி டோஸ்களை வழங்கியுள்ளது மத்திய அரசு

Posted On: 30 JUN 2021 11:10AM by PIB Chennai

மாநிலங்கள்  மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு 32.12 கோடி கொவிட் தடுப்பூசி டோஸ்களை மத்திய அரசு வழங்கியுள்ளது.  73 லட்சத்துக்கும் மேற்பட்ட தடுப்பூசிகள் டோஸ்கள் (73,00,166) இன்னும் போடுவதற்கு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிடம் மிச்சம் உள்ளன.

கொவிட் தடுப்பூசி போடுவதை விரைவு படுத்துவதிலும்நாடு முழுவதும் விரிவுபடுத்துவதிலும் மத்திய அரசு உறுதியுடன் உள்ளது.

கொவிட் தடுப்பூசியின் புதிய திட்டம் 2021 ஜூன் 21ம் தேதி தொடங்கியது.

அதிக தடுப்பூசிகள் கிடைக்கச் செய்வதன் மூலம் தடுப்பூசி போடும் நடவடிக்கை அதிகரிக்கப்பட்டு வருகிறது. தடுப்பூசி போடுவதை சிறப்பாக திட்டமிடுவதற்கும், தடுப்பூசி விநியோகத்தை ஒழுங்குபடுத்துவதற்கும், தடுப்பூசி கிடைக்கும் நிலவரம் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு முன்கூட்டியே தெரிவிக்கப்படுகிறது.

நாடு தழுவிய தடுப்பூசி திட்டத்தின் ஒரு பகுதியாக, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு கொவிட் தடுப்பூசிகளை இலவசமாக வழங்குகிறது.

18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொவிட் தடுப்பூசி போடும் புதிய திட்டத்தின்படிதடுப்பூசி உற்பத்தி நிறுவனங்கள் தயாரிக்கும் 75 சதவீத தடுப்பூசிகளை மத்திய அரசு கொள்முதல் செய்து, மாநிலங்களுக்கு மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இலவசமாக வழங்குகிறது.

மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இது வரை மத்திய அரசு 32.13 கோடி (32,13,75,820) தடுப்பூசிகளை இலவசமாகவும் மற்றும் மாநிலங்களின் நேரடி கொள்முதல் மூலமாகவும் வழங்கியுள்ளது. 

இவற்றில் இன்று காலை 8 மணி வரைவீணாண தடுப்பூசிகள் உட்பட 31,40,75,654 டோஸ்கள் காலியாகியுள்ளது.

73 லட்சத்துக்கும் மேற்பட்ட தடுப்பூசிகள் டோஸ்கள் (73,00,166) இன்னும் போடுவதற்கு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிடம் மிச்சம் உள்ளன.

அடுத்த 3 நாட்களில், 24,65,980 தடுப்பூசி டோஸ்களை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் பெறவுள்ளன. 

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைப் பார்க்கவும்:

 https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1731363

*****************



(Release ID: 1731421) Visitor Counter : 286