சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
கொவிட்-19 தடுப்பு மருந்து வழங்கலின் 162-வது நாள்: 32 கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகளை இது வரை செலுத்தி முக்கிய மைல்கல்லை இந்தியா கடந்துள்ளது
இடுகை இடப்பட்ட நாள்:
26 JUN 2021 8:27PM by PIB Chennai
கொவிட்-19 பெருந்தொற்றுக்கு எதிரான தனது போரில் மற்றுமொரு முக்கிய சாதனையை இந்தியா இன்று படைத்துள்ளது. இன்றிரவு 7 மணி அளவில் வெளியான தற்காலிக அறிக்கையின் படி, 32 கோடிக்கும் (32,11,43,649) அதிகமான தடுப்பூசிகளை நாடு இது வரை செலுத்தி உள்ளது.
ஜூன் 21-ல் இருந்து அனைவருக்கும் தடுப்புமருந்து வழங்கும் நடவடிக்கை தொடங்கி உள்ள நிலையில், இன்றிரவு 7 மணி அளவிலான தற்காலிக அறிக்கையின் படி, 58.10 லட்சம் (58,10,378) தடுப்பூசி டோஸ்கள் இன்று வழங்கப்பட்டுள்ளன
18-44 வயது பிரிவில் 36,68,189 பயனாளிகள் தங்களது முதல் டோஸ் தடுப்பூசியையும், 1,14,506 பயனாளிகள் தங்களது இரண்டாவது டோசையும் இன்று பெற்றனர், 37 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் இருக்கும் 8,30,23,693 பேர் முதல் டோசையும், 18,48,754 நபர்கள் இரண்டாம் டோசையும் மூன்றாம் கட்ட தடுப்பூசி வழங்கல் தொடங்கியதில் இருந்து இதுவரை பெற்றுள்ளனர்.
ஆந்திரப் பிரதேசம், அசாம், பிகார், சத்தீஸ்கர், தில்லி, குஜராத், ஹரியானா, ஜார்கண்ட், கர்நாடகா, கேரளா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, ராஜஸ்தான், தமிழ்நாடு, தெலங்கானா, ஒடிசா, உத்தரப் பிரதேசம் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்கள் 18-44 வயது பிரிவில் உள்ள 10 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு முதல் டோஸ் கொவிட் தடுப்பு மருந்தை இது வரை வழங்கியுள்ளன.
தமிழ்நாட்டில் மட்டும் 48,09,662 பேர் முதல் டோஸ் தடுப்பூசியையும், 69,386 நபர்கள் இரண்டாம் டோசையும் இது வரை செலுத்திக் கொண்டுள்ளனர். புதுச்சேரியில் 1,64,862 பேர் முதல் டோஸ் தடுப்பூசியை இது வரை செலுத்திக் கொண்டுள்ளனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1730582
-----
(வெளியீட்டு அடையாள எண்: 1730589)
வருகையாளர் எண்ணிக்கை : 285