புவி அறிவியல் அமைச்சகம்

தமிழ்நாட்டின் சில பகுதிகளில் கன மழைக்கு வாய்ப்பு

Posted On: 26 JUN 2021 5:43PM by PIB Chennai

இந்திய வானிலைத் துறையின் தேசிய வானிலை முன்னறிவிப்பு மையத்தின் படி:

(சனிக்கிழமை, 2021 ஜூன் 26, வெளியீட்டு நேரம் இந்திய நேரப்படி 16:15)

அனைத்திந்திய தாக்கம் சார்ந்த வானிலை முன்னெச்சரிக்கை தகவல்கள் (மாலை)

26 ஜூன் (நாள் 1): பிகார், அசாம் மற்றும் மேகாலயாவின் ஒரு சில பகுதிகளில் அதிக முதல் மிக கனமழையும்; கிழக்கு உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், ஜார்க்கண்ட், மேற்கு வங்கம், ஒடிசா, அந்தமான் நிக்கோபார் தீவுகள், சத்தீஸ்கர், தமிழ்நாடு, புதுச்சேரி காரைக்கால், கடலோர ஆந்திரப் பிரதேசம் மற்றும் ஏனம் ஆகிய இடங்களில் உள்ள ஒரு சில பகுதிகளில் கனமழையும் பெய்யக்கூடும்.

இடி மின்னல் மற்றும் காற்றுடன் (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வரை) கூடிய மழை ஜம்மு காஷ்மீர், லடாக், கில்கித்-பல்திஸ்தான், முசாபர்பாத், உத்தரகாண்ட், பஞ்சாப், ஹரியானா, சண்டிகர், தில்லி, கிழக்கு ராஜஸ்தான் மற்றும் அந்தமான் நிக்கோபார் தீவுகளின் ஒருசில பகுதிகளிலும், மின்னலுடன் கூடிய மழை இமாச்சலப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், பிகார், ஜார்க்கண்ட், மேற்கு வங்கம், ஒடிசா, அருணாச்சலப் பிரதேசம், அசாம், மேகாலயா, நாகாலாந்து, மணிப்பூர், மிசோராம், திரிபுரா, மத்தியப் பிரதேசம், விதர்பா, சத்தீஸ்கர், தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால், மேற்கு உட்புற கர்நாடகா, தெலங்கானா, கடலோர ஆந்திரப் பிரதேசம் மற்றும் ஏனம் ஆகிய இடங்களில் உள்ள ஒரு சில பகுதிகளிலும் பெய்யக்கூடும்.

மேற்கு ராஜஸ்தானின் ஒரு சில பகுதிகளில் இடி மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வரை) கூடிய மழை பெய்யக்கூடும்.

தென்மேற்கு, மேற்கு மத்திய மற்றும் வடக்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று (மணிக்கு 40-50 முதல் 60 கிலோமீட்டர் வரை)

வீசக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுவதால் இப்பகுதிகளில் உள்ள மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1730553

 

------


(Release ID: 1730564) Visitor Counter : 218


Read this release in: English , Urdu , Hindi , Punjabi