புவி அறிவியல் அமைச்சகம்

தென்மேற்கு பருவமழையின் வடக்கு முனை பார்மர், பில்வாரா, தோல்பூர், அலிகார், மீரட், அம்பாலா மற்றும் அமிர்தசரஸ் வழியாக தொடர்ந்து செல்கிறது

Posted On: 26 JUN 2021 4:58PM by PIB Chennai

இந்திய வானிலைத் துறையின் தேசிய வானிலை முன்னறிவிப்பு மையத்தின் படி:

(சனிக்கிழமை, 2021 ஜூன் 26, வெளியீட்டு நேரம் இந்திய நேரப்படி 16:15)

இந்திய நேரப்படி பிற்பகல் 2.30 மணி அளவில் பதிவான தரவுகளின் அடிப்படையில் அனைத்திந்திய வானிலை தகவல்கள் (மாலை)

தென்மேற்கு பருவமழையின் வடக்கு முனை பார்மர், பில்வாரா, தோல்பூர், அலிகார், மீரட், அம்பாலா மற்றும் அமிர்தசரஸ் வழியாக தொடர்ந்து செல்கிறது.

தற்போதைய வானிலை நிலவரங்களின் படி, ராஜஸ்தான், மேற்கு உத்தரப் பிரதேசம், ஹரியானா, சண்டிகர், தில்லி மற்றும் பஞ்சாபின் எஞ்சியிருக்கும் பகுதிகளுக்கு அடுத்த ஏழு நாட்களில் தென்மேற்கு பருவமழை மேலும் முன்னேறுவதற்கான சூழ்நிலை இல்லை. கிழக்கு உத்தரப் பிரதேசம் முதல் மேற்கு வங்காளத்தின் வடமேற்கு விரிகுடா வரை காற்றழுத்தம் நிலவுகிறது.

ஜார்க்கண்ட் மற்றும் அதற்கு அருகிலுள்ள பகுதிகளில் 3.1 கிலோ மீட்டர் வரை புயல் சுழற்சி நிலவுகிறது. தெற்கு ஒடிசா மற்றும் அதற்கு அருகிலுள்ள பகுதிகளில் 0.9 கிலோ மீட்டர் மற்றும் 2.1 கிலோ மீட்டர் இடையே புயல் சுழற்சி நிலவுகிறது.

வட மேற்கு ராஜஸ்தான், வட கிழக்கு ராஜஸ்தான், தென்மேற்கு ராஜஸ்தான், தெற்கு குஜராத், மத்திய அரபிக்கடல் மற்றும் இவற்றை சுற்றியுள்ள பகுதிகளிலும் புயல் சுழற்சி நிலவுகிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1730535

 

-------

 


(Release ID: 1730563) Visitor Counter : 178


Read this release in: English , Urdu , Hindi , Punjabi