பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்

வேகமாக மாறிவரும் இந்தியாவின் தேவைக்கேற்ப குடிமை பணியாளர்கள் தொடர்ந்து தங்களை தயார்படுத்திக்கொள்ள வேண்டும்: மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்

Posted On: 25 JUN 2021 6:06PM by PIB Chennai

வேகமாக மாறிவரும் இந்தியாவின் தன்மைக்கேற்ப குடிமை பணியாளர்கள் தொடர்ந்து தங்களை தயார்படுத்திக்கொள்ள வேண்டும் என்று மத்திய வட கிழக்கு மாகாண வளர்ச்சி இணை அமைச்சரும் (தனிப்பொறுப்பு), பிரதமர் அலுவலகம், பணியாளர், பொதுமக்கள் குறைகள், ஓய்வூதியம், அணு சக்தி மற்றும் விண்வெளித்துறை இணை அமைச்சருமான திரு ஜிதேந்திர சிங் கூறினார்.

புதிய இந்தியாவின் மாறி வரும் தேவைகளுக்கேற்ப ஊழியர்கள் தங்களை மாற்றியமைத்துக் கொள்ள வேண்டும் என்று கூறிய அவர், ஆல்வின் டோப்ளரின் புகழ்பெற்ற வரிகளான, “21-ம் நூற்றாண்டின் கல்லாதவர்களாக, புதிதாக கற்றுக்கொள்ளாமல், தேவையற்றதை மறக்காமல், மறுபடி கல்லாமல் இருப்பவர்கள் இருப்பார்கள்,” என்பதை நினைவுக் கூர்ந்தார்.

முசோரியில் உள்ள லால் பகதூர் சாஸ்திரி தேசிய நிர்வாக அகாடெமியின் ஐஏஎஸ் பணிமுறை பயிற்சி பகுதி-2 (2019 பிரிவு) நிறைவு விழாவில் பேசிய அவர், முதல் குடிமை பணிகள் நாளான 1947 ஏப்ரல் 21 அன்று அன்றைய உள்துறை அமைச்சர் சர்தார் வல்லபாய் பட்டேல் கூறிய, “உங்கள் முன்னோர்கள் பொதுமக்களிடம் இருந்து விலகி இருந்தார்கள். இந்தியாவின் பொதுமக்களை உங்களது சொந்தங்களாக நினைக்க வேண்டியது உங்கள் கடமை,” என்பதை நினைவுக் கூர்ந்தார்.

சுதந்திரம் கிடைத்து ஏழு தசாப்தங்களுக்கு பிறகு முதல் முறையாக, குடிமை பணிகளுக்கு புதிய உற்சாகம் அளிக்கும் பணியை பிரதமர் திரு நரேந்திர மோடி தனிப்பட்ட முறையில் மேற்கொண்டு சர்தார் பட்டேலின் லட்சியத்தை முன்னெடுத்து சென்றதாக  அவர் கூறினார்.

இந்திய அரசியலமைப்பில் உள்ள அம்சங்கள் மற்றும் கொள்கைகளை ஐஏஸ் அதிகாரிகள் என்றும் மதித்து நடந்து கொள்ள வேண்டும் என்றும், நாட்டின் பொது மக்களின் பார்வையில் இந்திய ஆட்சிப் பணியின் கண்ணியத்தை உயர்த்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

பயிற்சியில் சிறந்து விளங்கியவர்களுக்கு குடியரசுத் தலைவரின் தங்க பதக்கம் உள்ளிட்ட பல்வேறு விருதுகள் வழங்கும் நிகழ்ச்சிக்கும் அமைச்சர் தலைமை வகித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1730339

*****************



(Release ID: 1730383) Visitor Counter : 264


Read this release in: English , Urdu , Hindi , Punjabi