எஃகுத்துறை அமைச்சகம்

மத்தியப் பிரதேசம் மாண்ட்லாவில் கொவிட் சிகிச்சை மருத்துவமனை: மத்திய அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான் மற்றும் மத்தியப் பிரதேச முதல்வர் திரு. சிவராஜ் சிங் சவுகான் தொடங்கி வைத்தனர்

Posted On: 25 JUN 2021 5:35PM by PIB Chennai

மத்தியப் பிரதேசம் மாண்ட்லா மாவட்டத்தில் கொவிட் சிகிச்சை மருத்துவமனையை முதல்வர் திரு. சிவராஜ் சிங் சவுகானுடன் இணைந்து பெட்ரோலியத்துறை அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான் தொடங்கி வைத்தார். 

இந்நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான் கூறியதாவது:

கொரோனா தொற்றை எதிர்த்து போராடுவதில், புதிய மாதிரியை ஏற்படுத்தியுள்ள மத்திய பிரதேச அரசுக்கு பாராட்டுக்கள். மக்களின் பங்களிப்பாலும், முறையான திட்டமிடல் ஆகியவற்றால்  இது சாத்தியமானது. சிறந்த நிர்வாகத்தை உறுதி செய்துள்ளது. இந்த வாரம் தொடங்கப்பட்ட புதிய தடுப்பூசி திட்டத்தில், மத்தியப் பிரதேசம் முன்னணியில் உள்ளது. இந்த மாநிலத்தில் இதுவரை 1.82 கோடி மக்கள் தடுப்பூசி போட்டுள்ளனர்.

கொவிட் புதிய பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து குறைந்தாலும், 3வது அலை ஏற்பட்டால், அதை சந்திக்க தயாராக இருக்க அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு எடுக்கும்.  வரும் நாட்களில் தடுப்பூசி நடவடிக்கைகள் அதிகரிக்கும். இந்தாண்டு இறுதிக்குள், தகுதியான அனைவருக்கும் தடுப்பூசி போடப்படும் என்று கூறினார்.

மத்திய அரசின் முழு ஆதரவுடன், மாநில அரசு கொவிட் பாதிப்பை வெற்றிகரமாக கட்டுப்படுத்தியுள்ளது. கொவிட் தடுப்பு நடவடிக்கைகள், தடுப்பூசி போடுதல் என அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மத்தியப் பிரதேச அரசு எடுக்கிறது. இந்த புதிய மருத்துவமனையில் அளிக்கப்படும் வசதிகள், கொரோனாவை எதிர்த்து போராட மேலும் உதவும், 3வது அலையை தடுக்கும் என முதலமைச்சர் திரு. சிவராஜ் சிங் சவுகான் கூறினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1730334

****************


(Release ID: 1730372) Visitor Counter : 262


Read this release in: English , Urdu , Hindi , Punjabi