புவி அறிவியல் அமைச்சகம்

கிழக்கு மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கரில் ஒரு சில இடங்களில் இன்று கன மழைக்கு வாய்ப்பு

Posted On: 25 JUN 2021 2:12PM by PIB Chennai

கிழக்கு மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கரில் ஒரு சில இடங்களில் இன்று கன மழை முதல் அதிக கனமழைக்கு  வாய்ப்புள்ளதாக இந்திய வானிலைத்துறையின் தேசிய முன்னறிவிப்பு மையம் கூறியுள்ளது.

அது விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கிழக்கு மத்தியப் பிரதேசம் மற்றும் சத்தீஸ்கரில் ஒரு சில இடங்களில் இன்று கனமழை முதல் அதிக கனமழைக்கு வாய்ப்புள்ளது.

கிழக்கு உத்தரப் பிரதேசம், மேற்கு மத்தியப் பிரதேசம், பீகார், ஜார்கண்ட், மேற்கு வங்கம், சிக்கிம், ஒடிசா, அருணாச்சலப் பிரதேசம், அசாம், மேகாலயா, குஜராத், கொங்கன் மற்றும்  கோவா ஆகிய பகுதிகளில் கனமழை பெய்யும்.

மேற்கு ராஜஸ்தான் மற்றும் அந்தமான் நிக்கோபார் தீவுகள், ஜம்மு காஷ்மீர், லடாக், கில்கிட்-பால்டிஸ்தான், முசாபராபாத், இமாச்சல பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், ஹரியானா, சண்டிகர், தில்லி, தெலுங்கானா ஆகிய பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னல், பலத்த காற்றுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளது.

 கிழக்கு உத்தரப்பிரதேசம், கிழக்கு ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், விதர்பா, சத்தீஸ்கர், பீகார், ஜார்கண்ட், மேற்கு வங்கம் மற்றும் சிக்கிம், ஒடிசா, அசாம், மேகாலயா, நாகாலாந்து, மணிப்பூர், மிசோரம், திரிபுரா மற்றும் கடலோர ஆந்திரா மற்றும் யேனாம் ஆகிய பகுதிகளில் ஒரு சில இடங்களில் மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1730267

*****************


(Release ID: 1730300)
Read this release in: English , Urdu , Marathi , Hindi