நிதி அமைச்சகம்

ராய்ப்பூரில் வருமானவரி சோதனை: ரூ. 6 கோடி பறிமுதல்

Posted On: 24 JUN 2021 3:31PM by PIB Chennai

சத்தீஸ்கர் ராய்பூரில் வருமானவரித்துறை நடத்திய சோதனையில் கணக்கில் காட்டப்படாத ரூ.6 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது. ரூ.100 கோடிக்கும் மேல் ஹவாலா மோசடி நடத்திருக்கலாம் என தெரியவந்துள்ளது.

சத்தீஸ்கர் ராய்ப்பூரில் கணக்கில் காட்டப்படாத பணம் எடுத்துச் செல்லப்படுவதாக வருமான வரித்துறைக்கு உளவுத் தகவல் கிடைத்தது. இதையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில் ஹவாலா டீலர் அடையாளம் காணப்பட்டார்.

இதையடுத்து ராய்ப்பூரில் ஹவாலா டீலருக்கு சொந்தமான 4 இடங்களில் கடந்த 21ம் தேதி சோதனை நடத்தப்பட்டது. இதில் விற்பனை, கொள்முதல் பதிவுகள் மற்றும் கணக்கில் காட்டப்படாத பணம் பிற இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டது வரை பல நடவடிக்கைகள் கண்டறிப்பட்டன.

கணக்கில் காட்டப்படாத ரூ. 6 கோடி ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

ஹவாலா பரிவர்த்தனை விவரங்கள் அடங்கிய கம்ப்யூட்டர் டிஸ்க், பென் டிரைவ் போன்ற டிஜிட்டல் சாதனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. இவை ஆராயப்பட்டு வருகின்றன. ரூ.100 கோடிக்கு மேல் ஹவாலா பரிவர்த்தனை நடந்திருக்கலாம் என ஆரம்ப கட்ட மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன. இது குறித்து மேலும் விசாரணை நடக்கிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1730017

 

-----



(Release ID: 1730115) Visitor Counter : 171


Read this release in: English , Urdu , Hindi