புவி அறிவியல் அமைச்சகம்

தில்லி - தேசிய தலைநகர் பகுதியில் காற்றின் தரம் இன்றும், நாளையும் மிதமாக இருக்க வாய்ப்பு

இடுகை இடப்பட்ட நாள்: 24 JUN 2021 2:57PM by PIB Chennai

தில்லி - தேசிய தலைநகர் பகுதியில் காற்றின் தரம் இன்றும், நாளையும் மிதமாக இருக்க வாய்ப்புள்ளது என இந்திய வானிலை துறையின் முன்னறிவிப்பு மையம் தெரிவித்துள்ளது.  அது வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தில்லி - தேசிய தலைநகர் பகுதியில் காற்றின் தரம் இன்றும், நாளையும் மிதமாக இருக்கும். வலுவான மேல் காற்று, போக்கு வரத்து புகை காரணமாக காற்று மாசுவின் அளவு பிஎம்10 என்ற அளவில் இருக்கும். காற்றின் தரம் சற்று முன்னேற்றம் அடைந்து, ஜூன் 26ம் தேதி திருப்தியான அளவில் இருக்கும். அதனை தொடர்ந்து 5 நாட்களுக்கு காற்றின் தரம் திருப்திகரமாக மிதமான பிரிவு வரை இருக்கும்.

தில்லியின் கிழக்கு திசையில் இருந்து மணிக்கு 10 முதல் 12 கி.மீ வேகத்தில் வீசும் காற்று. வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். இன்று இரவு இடியுடன் கூடிய மழைக்கும் வாய்ப்புள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1730009

----


(வெளியீட்டு அடையாள எண்: 1730041) வருகையாளர் எண்ணிக்கை : 190
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी