புவி அறிவியல் அமைச்சகம்
வடமாநிலங்களில் மெதுவாக முன்னேறுகிறது தென்மேற்கு பருவக்காற்று
இடுகை இடப்பட்ட நாள்:
24 JUN 2021 12:19PM by PIB Chennai
ராஜஸ்தான், மேற்கு உத்தரப் பிரதேசம், ஹரியானா, சண்டிகர், தில்லி, பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் தென்மேற்கு பருவக்காற்று மெதுவாக முன்னேறும் என்பதால் நீடித்த மழைக்கு சாதகமாக இல்லை என தேசிய வானிலை முன்னறிவிப்பு தெரிவித்துள்ளது.
அதுவிடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
• தென்மேற்கு பீகார், தென்கிழக்கு உத்தரப் பிரதேசம், ஜார்கண்ட் மற்றும் அதனையொட்டியுள்ள பகுதிகளில் கடல் மட்டத்தில் இருந்து 5.8 கி.மீ உயரத்தில் புயல் சுழல் உள்ளது.
இந்த புயல் சுழலில் உள்ள காற்றழுத்தம், தென்மேற்கு பீகார், தென்கிழக்கு உத்தரப் பிரதேசம், தெற்கு சத்தீஸ்கர், ஜார்கண்ட், தெற்கு கடலோர ஆந்திர வரை கடல் மட்டத்தில் இருந்து 1.5 கி.மீ உயரம் வரை காணப்படுகிறது.
• புயல் சுழற்சியில் கிழக்கு, மேற்கு காற்றழுத்தம் ஜார்கண்ட் முதல் வடக்கு குஜராத் வரையும், வடக்கு சத்தீஸ்கரில் இருந்து தெற்கு மத்தியப் பிரதேசம் வரையும் கடல் மட்டத்தில் இருந்து 3.1 கி.மீ தொலைவில் காணப்படுகிறது.
• வடகிழக்கு ராஜஸ்தான் மீது உருவாகியுள்ள புயல் சுழல் கடல் மட்டத்திலிருந்து 1.5 கி.மீ உயரத்தில் உள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1729968
----
(வெளியீட்டு அடையாள எண்: 1729997)
வருகையாளர் எண்ணிக்கை : 216