புவி அறிவியல் அமைச்சகம்

தில்லி-தேசிய தலைநகர் பகுதியில் காற்றின் தரம் நாளை மோசமாக இருக்கும் : தேசிய வானிலை முன்னெச்சரிக்கை மையம் தகவல்

प्रविष्टि तिथि: 23 JUN 2021 3:08PM by PIB Chennai

தில்லி-தேசிய தலைநகர் பகுதியில் காற்றின் தரம் நாளை மோசமாக இருக்கும் என தேசிய வானிலை முன்னெச்சரிக்கை மையம் கூறியுள்ளது.

அது விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 

தில்லி - தேசிய தலைநகர் பகுதியில் இன்று காற்றின் தரம்  மிதமானது முதல் மோசமான பிரிவிலும், நாளை (ஜூன் 24) மோசமான பிரிவிலும் இருக்கும். மேல் காற்று, புழுதியை எழுப்பும் என்பதால், காற்றில் மாசுபிஎம்10 என்ற அளவில் இருக்கும்.  நாளை மறுதினம் (ஜூன் 25), காற்றின் தரம் சற்று மேம்பட வாய்ப்புள்ளது. ஆனால் மோசமானது முதல் மிதமான பிரிவில் இருக்கும். அதைத் தொடர்ந்த 5 நாட்களில் காற்றின் தரம் திருப்தியான பிரிவு முதல் மிதமான பிரிவில் இருக்க வாய்ப்புள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1729710

*****************


(रिलीज़ आईडी: 1729790) आगंतुक पटल : 219
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी