புவி அறிவியல் அமைச்சகம்

சத்தீஸ்கர் மாநிலத்தின் ஒரு சில பகுதிகளில் கன முதல் மிக கனமழை, வட தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலின் ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

Posted On: 23 JUN 2021 2:34PM by PIB Chennai

இந்திய வானிலை ஆராய்ச்சித் துறையின் தேசிய வானிலை முன்னறிவிப்பு மையம் விடுத்துள்ள செய்தி:

(புதன்கிழமை, ஜூன் 23, 2021: வெளியிடப்பட்ட நேரம்: இந்திய நேரப்படி பிற்பகல் 1:15)

ஜூன் 23 (நாள் 1): சத்தீஸ்கர் மாநிலத்தின் ஒரு சில பகுதிகளில் கன முதல் மிக கனமழையும், வட தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால், கேரளா மற்றும் மாஹே, கடலோர ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா, தென்கிழக்கு உத்தரப் பிரதேசம், மத்திய பிரதேசம், விதர்பா, ஜார்கண்ட், மேற்கு வங்கம் மற்றும் சிக்கிம், ஒடிசா, அந்தமான் நிக்கோபார் தீவுகள், அசாம் மற்றும் மேகாலயா, நாகாலாந்து, மணிப்பூர், மிசோரம் மற்றும் திரிபுராவின் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.

அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளின் ஒரு சில இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்று (மணிக்கு 40-50 கிலோ மீட்டர் வேகத்தில்) வீசக்கூடும். ஜம்மு காஷ்மீர், லடாக், கில்கித்- பல்திஸ்தான் மற்றும் முசாபராபாத், உத்தரப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தானின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் மணிக்கு 30-40 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்தக் காற்று வீசக் கூடும். கடற்கரை ஆந்திரப் பிரதேசம் மற்றும் யானாம், தெலங்கானா, ராயலசீமா, கேரளா மற்றும் மாஹேவின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் மழை பெய்யக்கூடும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1729687

*****************



(Release ID: 1729754) Visitor Counter : 161


Read this release in: English , Urdu , Hindi