நிதி அமைச்சகம்

வருமானவரி சட்டம் 1961-ன் 206ஏபி மற்றும் 206 சிசிஏ பிரிவின் கீழ் செயல்பாட்டை பயன்படுத்துவதற்கான விளக்கம்

प्रविष्टि तिथि: 22 JUN 2021 7:16PM by PIB Chennai

நிதி சட்டம், 2021, 206ஏபி மற்றும் 206 சிசிஏ என்ற இரு பிரிவுகளை வருமானவரி சட்டம் 1961-ல் சேர்த்தது. இது 2021 ஜூலை 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.  இந்த பிரிவுகள், வரித்தாக்கல் செய்யாதவர்களுக்கு அதிக வீதத்திலான வரி பிடித்தம் அல்லது வரி வசூலை கட்டாயமாக்குகிறது. அதிக வீதம், பரிந்துரைக்கப்பட்ட அளவை விட இரு மடங்கு அல்லது 5 சதவீதம் இதில் எது அதிகமோ அது வசூலிக்கப்படும்.

இந்த இரு பிரிவுகளை அமல்படுத்துவதில்வரி பிடித்தம் செய்பவர் / வரி வசூலிப்பவரின் கூடுதல் இணைக்க சுமையை குறைக்க, மத்திய நேரடி வரிகள் வாரியம்(சிபிடிடி) 206 ஏபி மற்றும் 206 சிசிஏ என்ற புதிய செயல்பாடுகளை வழங்கியுள்ளது.    இந்த செயல்பாடு, வருமானவரித்துறையின், ரிப்போர்ட்டிங் இணையளத்தில்  (https://report.insight.gov.in) செயல்பாட்டில்  உள்ளது.

வரிபிடித்தம் செய்பவர், வரிபிடித்தம் செய்ய வேண்டியவரின் பேன் எண் மூலம், அவர் வருமானவரி கணக்கு தாக்கல் செய்யாதவரா என்பதை அறிய முடியும். அந்த விவரங்களை பதிவிறக்கமும் செய்ய முடியும்.

இந்த செயல்பாட்டுக்கான காரணம், 2021 ஜூன் 21ம் தேதி வெளியிட்ட  சிபிடிடி சுற்றறிக்கை எண்.11-ல் விவரிக்கப்பட்டுள்ளது. இதை இந்த இணைப்பில்

(https://www.incometaxindia.gov.in/communications/circular/circular_11_2021.pdf) காணலாம். இந்த சுற்றறிக்கை, வரி பிடித்தம் செய்பவர் / வரி வசூலிப்பவரின் சுமையை மேலும் குறைக்கிறது.

இந்த புதிய செயல்பாட்டுடன், வரி செலுத்துவோரின் இணக்கச் சுமையை எளிதாக்குவதற்கான தனது உறுதிப்பாட்டை  மத்திய அரசு  மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

*****************


(रिलीज़ आईडी: 1729510) आगंतुक पटल : 362
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Punjabi