வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
தொழில்துறை அனுமதிக்கான ஒற்றைச் சாளர முறை: மத்திய அமைச்சர் திரு பியூஷ் கோயல் ஆய்வு
Posted On:
22 JUN 2021 7:54PM by PIB Chennai
தொழில்துறை அனுமதிக்கான ஒற்றைச் சாளர முறையை மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் ஆய்வு செய்தார். இந்த கூட்டத்தில் வர்த்தக மற்றும் தொழில்துறை இணையமைச்சர் திரு சோம் பிரகாஷ் கலந்து கொண்டார்.
இந்த கூட்டத்துக்குப்பின் திரு பியூஷ் கோயல் கூறியதாவது:
தேசிய ஒற்றைச் சாளர முறையின் முதல் கட்டம் விரைவில் தொடங்கப்படும். இந்த டிஜிட்டல் தளம் முதலீட்டாளர்கள், தொழில் தொடங்குவதற்கு தேவையான பல வகையான முன் அனுமதிகளை பெற அனுமதிக்கும். முதல் கட்டமாக, 17 அமைச்சகங்கள் / துறைகள் மற்றும் 14 மாநிலங்கள் இடம் பெறும் டிஜிட்டல் தளம் விரைவில் தொடங்கப்படவுள்ளது.
தொழில் தொடங்க நிலம் வாங்குவது முதல் அனைத்து தகவல்களும் இந்த டிஜிட்டல் தளத்தில் இருக்கும். இந்த ஒற்றை சாளர முறை, உண்மையானதாகவும், அனைத்து பிரச்னைகளுக்கும் ஒரே இடத்தில் தீர்வு காணக்கூடியதாகவும் இருக்கும். முதலீட்டுக்கு முந்தைய ஆலோசனை, நிலம் உள்ள இடங்கள், மத்திய மற்றும் மாநில அளவிலான அனுமதி ஆகியவை இதில் கிடைக்கும். ஒரு குறிப்பிட்ட தொழில் தொடங்குவதற்கு தேவையான அனுமதிகளை முதலீட்டாளர்கள் அறிந்து கொள்ளவும், அதற்கு விண்ணப்பிக்கவும், அதன் நிலவரத்தை அறிந்து கொள்ளவும், தேவையான விளக்கங்களை பெறவும் இந்த டிஜிட்டல் தளம் உதவும்.
இவ்வாறு திரு.பியூஷ் கோயல் கூறினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1729456
*****************
(Release ID: 1729495)
Visitor Counter : 236