வடகிழக்குப் பகுதி வளர்ச்சி அமைச்சகம்

கொவிட்டுக்கு பிந்தைய உலகத்தில் இந்தியாவின் வளர்ச்சிக்கு வடகிழக்கு பிராந்தியம் தலைமை வகிக்கும்: மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்

Posted On: 22 JUN 2021 6:40PM by PIB Chennai

கொவிட்டுக்கு பிந்தைய உலகத்தில் இந்தியாவின் வளர்ச்சிக்கு வடகிழக்கு பிராந்தியம் தலைமை வகிக்கும் என்று வட கிழக்கு மாகாண வளர்ச்சி இணை அமைச்சரும் (தனிப்பொறுப்பு), பிரதமர் அலுவலகம், பணியாளர், பொதுமக்கள் குறைகள், ஓய்வூதியம், அணு சக்தி மற்றும் விண்வெளி இணை அமைச்சருமான திரு ஜிதேந்திர சிங் இன்று கூறினார்.

கொவிட் மேலாண்மை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் வடகிழக்கு பகுதி உதாரணமாக உருவாகி வருவதாகவும். கொவிட்டுக்கு பிந்தைய காலகட்டத்தில் இந்தியாவின் பொருளாதாரத்தை கட்டமைக்க நாம் ஈடுபடும் போது இது வரை கவனம் செலுத்தப்படாத பகுதிகள் மீது கவனம் செலுத்த வேண்டி வரும் என்றும், அப்போது அதற்கான சரியான இடமாக வடகிக்கு திகழும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

வளர்ந்து வரும் வாய்ப்புகளின் நிலம், கவனம் பெறும் பகுதி: மணிப்பூர்எனும் தலைப்பில் அஸோச்சாம் மற்றும் மணிப்பூர் அரசு ஏற்பாடு செய்த மாநாடு ஒன்றில் பேசிய அமைச்சர் இவ்வாறு கூறினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1729459

*****************



(Release ID: 1729494) Visitor Counter : 248


Read this release in: English , Urdu , Hindi