சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம்

அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக, நீதிபதி திரு முனீஷ்வர் நாத் பண்டாரி நியமிக்கப்பட்டார்

Posted On: 22 JUN 2021 5:01PM by PIB Chennai

இந்திய அரசமைப்பின் 223-வது சட்டப்பிரிவு தமக்கு வழங்கியுள்ள அதிகாரத்தை பயன்படுத்தி, 2021 ஜூன் 26 முதல் அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக செயல்பட நீதிபதி திரு முனீஷ்வர் நாத் பண்டாரியை குடியரசு தலைவர் நியமித்துள்ளார். அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி, நீதிபதி திரு சஞ்சய் யாதவ் ஓய்வு பெறுவதையொட்டி இந்த நியமனம் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பை சட்டம் மற்றும் நீதி அமைச்சகத்தின் நீதி துறை இன்று வெளியிட்டுள்ளது.

1983-ம் ஆண்டு மே 29-ம் தேதி நீதிபதி திரு முனீஷ்வர் நாத் பண்டாரி, பி.காம்., எல்.எல்.பி., வழக்கறிஞராக தம்மை பதிவு செய்து கொண்டார். ராஜஸ்தான் உயர் நீதிமன்றம், மத்திய நிர்வாக தீர்ப்பாயம் மற்றும் உச்ச நீதிமன்றம் ஆகியவற்றில் அரசமைப்பு, சிவில், சேவை, தொழிலாளர், குற்றவியல் உள்ளிட்ட வழக்குகளில் அவர் ஆஜராகியுள்ளார்.

ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக 2007 ஜூலை 5 அன்றும், நிரந்தர நீதிபதியாக 2008 நவம்பர் 4 அன்றும் அவர் நியமிக்கப்பட்டார். 2019 மார்ச் 15 அன்று அலகாபாத் உயர் நீதிமன்றத்திற்கு அவர் மாற்றம் செய்யப்பட்டார்.

*****************


(Release ID: 1729452) Visitor Counter : 316


Read this release in: English , Urdu , Hindi