புவி அறிவியல் அமைச்சகம்

கிழக்கு, வடகிழக்கு மாநிலங்களில் அடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு

प्रविष्टि तिथि: 22 JUN 2021 2:20PM by PIB Chennai

கிழக்கு, வடகிழக்கு மாநிலங்களில் அடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளது என தேசிய வானிலை முன்னறிவிப்பு  மையம் தெரிவித்துள்ளது.

அது விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தென்மேற்கு பருவ காற்று, ராஜஸ்தான், மேற்கு உத்தரப் பிரதேசம், ஹரியானா, சண்டிகர், தில்லி, பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் மெதுவாக முன்னேறுவது மழைக்கு சாதகமாக இல்லை.

கீழடுக்கு பருவ காற்று மற்றும் தென்கிழக்கு காற்று குவிவதன் காரணமாக வடக்கு ஒடிசா, மேற்கு வங்கம், சிக்கிம், ஜார்கண்ட், சட்டீஸ்கர் மற்றும் பீகாரில் ஒரு சில இடங்களில் அடுத்த 5 நாட்களுக்கு கன மழைக்கு வாய்ப்புள்ளது.

தெற்மேற்கு காற்றின் ஈரப்பதம் வலுவடைவதன் காரணமாக  வடகிழக்கு மாநிலங்களில் அடுத்த 5 நாட்களுக்கு பரவலாக மழை பெய்யும். அசாம், மேகாலயாவில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1729352

*****************


(रिलीज़ आईडी: 1729401) आगंतुक पटल : 182
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Punjabi