பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்

ஜம்மு காஷ்மீரில் உள்ள புனித நகரமான கத்ரா-வைஷ்ணோ தேவியில் ‘அனைவருக்கும் இலவச தடுப்பு மருந்து’ திட்டத்தை மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தொடங்கி வைத்தார்

Posted On: 21 JUN 2021 6:44PM by PIB Chennai

அருகிலுள்ள தடுப்பு மருந்து வழங்கும் மையத்திற்கு ஒருவர் தனது சொந்த வாகனத்தில் சென்று, அதில் அமர்தவாறே தடுப்பூசி செலுத்திக்கொள்ளும் வசதியை விரிவுபடுத்த வேண்டும் என்று மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் வலியுறுத்தினார்.

இந்த முறை வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டு நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் உற்சாகமூட்டும் விளைவுகளை ஏற்படுத்தியுள்ளதாகவும், தடுப்பு மருந்து வழங்கலை விரைவுபடுத்தி, எளிதாக்குவதற்காக இதை ஜம்மு காஷ்மீரில் பின்பற்ற வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

வைஷ்ணவி தேவி அன்னையின் மடியில் அமைந்துள்ள புனித நகரமான கத்ராவில்அனைவருக்கும் இலவச தடுப்பு மருந்துதிட்டத்தை தொடங்கி வைத்து பேசிய டாக்டர் ஜிதேந்திர சிங், பிரதமர் திரு நரேந்திர மோடியால் தொடங்கி வைக்கப்பட்ட உலகின் மிகப்பெரிய தடுப்பு மருந்து இயக்கத்தை வெற்றியடைய செய்ய அனைவரும், குறிப்பாக இளைஞர்கள், உறுதியேற்று, உலக நாடுகளுக்கு உதாரணமாக திகழ வேண்டுமென்று அவர் கூறினார்.

அனைவரும் தடுப்பு மருந்து பெற வேண்டியதன் முக்கியத்துவம் குறித்து பேசிய அவர், தடுப்பு மருந்து வழங்கல் நடவடிக்கையை மக்கள் இயக்கமாக மாற்றுவது அரசின் கடமை மட்டுமே அல்ல என்றும், சமுதாயத்திற்கும் இதில் பங்குள்ளது என்றும் கூறினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1729129

----



(Release ID: 1729247) Visitor Counter : 195


Read this release in: English , Urdu , Hindi , Punjabi