சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களுக்கு 29.35 கோடி கொவிட் தடுப்பூசிகள் வழங்கப்பட்டன
Posted On:
21 JUN 2021 10:56AM by PIB Chennai
தேசிய தடுப்பூசி திட்டத்தின் ஒரு பகுதியாக, கொவிட் தடுப்பூசிகளை மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு இலவசமாக வழங்கி உதவி வருகிறது. மேலும், தடுப்பூசிகளை மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்கள் நேரடியாக கொள்முதல் செய்யவும் மத்திய அரசு வசதி ஏற்படுத்தியுள்ளது.
பரிசோதனை, கண்காணிப்பு, சிகிச்சை மற்றும் கொவிட் தடுப்பு நடவடிக்கைகள் ஆகியவற்றுடன் கொவிட்டை கட்டுப்படுத்தும் விரிவான உத்தியில் தடுப்பூசியும் ஒருங்கிணைந்த பகுதிதான்.
தாரளமயமாக்கப்பட்ட தடுப்பூசி திட்டத்தை அமல்படுத்தியது,கொவிட் தடுப்பூசி திட்டத்தின் 3வது கட்ட உத்தியை துரிதப்படுத்தியது ஆகியவை 2021 மே 1ம் தேதி முதல் தொடங்கியது.
இந்த உத்தியின் கீழ் ஒவ்வொரு மாதமும், மத்திய மருந்துகள் பரிசோதனைக் கூடம் அனுமதிக்கும், தடுப்பூசி டோஸ்களில் 50 சதவீதத்தை மத்திய அரசு கொள்முதல் செய்கிறது. இந்த மருந்து மாநிலங்களுக்கு இலவசமாக தொடர்ந்து வழங்கப்படும். .
மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களுக்கு இதுவரை 29.35 கோடி (29,35,04,820) தடுப்பூசிகள் மத்திய அரசு மூலம் இலவசமாகவும், மாநிலங்களின் நேரடி கொள்முதல் மூலமாகவும்
வழங்கப்பட்டுள்ளன. இவற்றில் வீணானது உட்பட இன்று காலை 8 மணி வரை , 26,36,26,884 டோஸ்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. 2.98 கோடிக்கு மேற்பட்ட (2,98,77,936) கொவிட் தடுப்பூசி டோஸ்கள், மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களிடம் இன்னும் உள்ளன.
அடுத்த 3 நாட்களில், மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்கள் மேலும் கொவிட் தடுப்பூசிகளை பெறவுள்ளன.
------
(Release ID: 1729046)
Visitor Counter : 204
Read this release in:
Malayalam
,
English
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada