புவி அறிவியல் அமைச்சகம்

அடுத்த 5 நாட்களுக்கு நாட்டில் எந்தப் பகுதியிலும் அனல் காற்றுக்கு வாய்ப்பில்லை: வானிலை ஆய்வு மையம்

இடுகை இடப்பட்ட நாள்: 20 JUN 2021 6:12PM by PIB Chennai

இந்திய வானிலை ஆராய்ச்சித் துறையின் வானிலை முன்னறிவிப்பு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

(நாள்: ஜூன் 20, 2021, வெளியிடப்பட்ட நேரம்: இந்திய நேரப்படி மாலை 4 மணி)

தற்போதைய வெப்பநிலை நிலவரம் மற்றும் அடுத்த ஐந்து நாட்களுக்கான முன்னறிவிப்பு

நேற்றைய அதிகபட்ச வெப்பநிலை நிலவரம்:

அனல் காற்று:- இல்லை

அதிகபட்ச வெப்பநிலை:- மேற்கு ராஜஸ்தானின் ஒரு சில பகுதிகளில் 19.6.2021 அன்று அதிகபட்சமாக சுமார் 40 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானது.

நேற்று மிக அதிகமாக மேற்கு ராஜஸ்தானின் கங்காநகரில் 41.3 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானது.

இன்றைய குறைந்தபட்ச வெப்பநிலை நிலவரம்:

வெப்ப இரவு:- இல்லை

குறைந்தபட்ச வெப்பநிலை:- ஒடிசா, கடற்கரை ஆந்திரப்பிரதேசம், யானம் மற்றும் அந்தமான் நிக்கோபார் தீவுகளின் ஒரு சில பகுதிகளில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பைவிட அதிகமாக (1.6 முதல் 3.0 டிகிரி செல்சியஸ் வரை) இருக்கும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1728807

 

----


(வெளியீட்டு அடையாள எண்: 1728856) வருகையாளர் எண்ணிக்கை : 235
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी