எரிசக்தி அமைச்சகம்

இந்தியாவில் பணிபுரிவதற்கான சிறந்த 50 இடங்களில் என்டிபிசி-யும் ஒன்று

प्रविष्टि तिथि: 19 JUN 2021 3:25PM by PIB Chennai

பணிபுரிவதற்கு சிறந்த நிறுவனங்களில் ஒன்றாக மின்சார அமைச்சகத்தின் கீழ் இயங்கும் மகாரத்னா மத்திய பொதுத்துறை நிறுவனமான என்டிபிசி தொடர்ந்து 15-வது ஆண்டாக கிரேட் பிளேஸ் டு ஒர்க் நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் பணிபுரிவதற்கு உகந்த சிறந்த 50 நிறுவனங்களில் ஒன்றாக தொடர்ந்து தேர்ந்தெடுக்கப்பட்டு வரும் ஒரே பொதுத்துறை நிறுவனமாக என்டிபிசி திகழ்கிறது.

கடந்த வருடம் 47-வது இடத்தைப் பெற்றிருந்த என்டிபிசி இந்த வருடம் 38-வது இடத்திற்கு முன்னேறி உள்ளது. மேலும், தேசத்தை கட்டமைப்பவர்கள்-2021 எனும் பட்டியலில் இந்தியாவின் சிறந்த வேலை வழங்கும் நிறுவனங்களில் ஒன்றாக முதல் முறையாக என்டிபிசி இடம்பிடித்துள்ளது. இந்நிறுவனம் கடைப்பிடித்துவரும் பணியாளர் கொள்கைகள் மற்றும் அணுகுமுறைகளுக்கு சான்றாக இந்த அங்கீகாரங்கள் இருக்கின்றன.

கிரேட் பிளேஸ் டு ஒர்க் நிறுவனத்தின் சான்றை பெறுவது பல நிறுவனங்களின் இலட்சியமாகும். சிறந்த பணியிடங்களை அங்கீகரிப்பதற்கான சர்வதேச அளவிலான உயர்ந்த தர சான்றாக இது உள்ளது.

பணியாளர் மேலாண்மையில் நாட்டின் மிக உயரிய விருதாக கருதப்படும் இந்திய வர்த்தக கூட்டமைப்பின் மனிதவள எடுத்துக்காட்டு விருதை 2021 மார்ச் மாதம் என்டிபிசி வென்றது குறிப்பிடத்தக்கது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleseDetailm.aspx?PRID=1728529

*****************


(रिलीज़ आईडी: 1728636) आगंतुक पटल : 201
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Punjabi