பாதுகாப்பு அமைச்சகம்

ஒருங்கிணைந்த பட்டமளிப்பு அணிவகுப்பு நிகழ்ச்சியில் விமானப்படை தளபதியின் உரை

Posted On: 19 JUN 2021 11:24AM by PIB Chennai

விமானப்படை அகாடமியில் இன்று (ஜூன் 19, 2021) நடைபெற்ற ஒருங்கிணைந்த பட்டமளிப்பு அணிவகுப்பு நிகழ்ச்சியில் விமானப்படை தளபதி ஆற்றிய உரை பின்வருமாறு:

•        விமானப்படை தலைமை பயிற்சித் தளபதி அவர்களேவிமானப்படை அகாடமியின் தளபதி அவர்களே, காணொலி வாயிலாக இந்த நிகழ்வைக் காணும் பெற்றோர் மற்றும் உறவினர்களே, பயிற்றுனர்களே, அணிவகுப்பில் பங்கேற்கும் வீரர்களே.

•        ‘குடியரசுத் தலைவரின் ஆணைகளை பெறவிருக்கும் 161 பட்டம் பெறும் அதிகாரிகளுக்கு எனது வாழ்த்துகள்.

•        தங்களது பயிற்சியின்போது தலைசிறந்து செயலாற்றி விருதுகளை வென்றவர்களுக்கும், விங்ஸ் விருதுகளைப் பெறவிருக்கும் இந்திய கடற்படையைச் சேர்ந்த 6 அதிகாரிகள் மற்றும் இந்திய கடலோரக் காவல்படையைச் சேர்ந்த 5 அதிகாரிகளுக்கும் வாழ்த்துகள்.

•        கொவிட் தொற்றினால் உங்களது பயிற்சியில் இடையூறு ஏற்பட்டபோதும் உரிய காலத்தில் நீங்கள் அனைவரும் பயிற்சியை நிறைவு செய்ததனால் இந்த நிகழ்வு வரலாற்று முக்கியத்துவம் பெறுகிறது. இதுவரை இல்லாத வகையில் கடற்படை அகாடமி கடந்த ஓராண்டில் 20,500 மணி நேரம் பயணித்துள்ளது. நமது பயிற்சித் திட்டத்தில் குறிப்பிடத்தக்க மேம்பாட்டு அம்சங்களை செயல்படுத்தி இந்த மைல்கல் சாதனையை எட்டியதற்காக எனது சிறப்பு பாராட்டுகள்.

•        பயிற்சி காலத்தில் தங்களது மகள், மகனுக்கு உறுதுணையாக இருந்த அனைத்து பெற்றோர்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். இந்திய விமானப்படையின் தன்னம்பிக்கை வாய்ந்த அதிகாரிகளாக மாணவர்கள் மாறியிருப்பதற்கு பெற்றோரான உங்களது வழிகாட்டுதல், ஆதரவு மற்றும் ஊக்கமளிப்பு முக்கிய காரணம் என்பதை எண்ணி நீங்கள் பெருமை கொள்ள வேண்டும்.

•        இதுபோன்ற தருணத்தில் விமானப்படையில் இணைவது உங்களுக்குக் கிடைத்த அதிர்ஷ்டம். துல்லியமாக இலக்குகளை அழிக்கும் ஆயுதங்களுடன் விமான ஓட்டிகள் பணியாற்றுவார்கள். போர் போன்ற தருணங்களில் சமமான பங்களிப்பை வழங்கும் வகையில் நவீன ரக ஹெலிகாப்டர்கள் நம்மிடையே உள்ளன.

•        இந்திய விமானப்படை, கொவிட்-19 பெருந்தொற்றுக்கு எதிரான போராட்டத்திலும் ஆக்கப்பூர்வமான உதவிகளை அளித்து வருகிறது. விமானப்படை வீரர்களுக்கு முறையான தடுப்பூசி செலுத்தப்பட்டு, கொவிட் கட்டுப்பாடுகள் பின்பற்றப்பட்டு கொரோனா சம்பந்தமான அனைத்து பணிகளும் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டன. கொவிட் சம்மந்தமான அவசரகால உபகரணங்களைக் கொண்டு செல்வதில் இந்திய விமானப்படை முடுக்கிவிடப்பட்டது. பிராணவாயு டேங்கர்கள் மற்றும் இதர மருத்துவ உபகரணங்களை உள்நாடு மற்றும் சர்வதேச நாடுகளிலிருந்து கொண்டு வருவதற்காக நமது விமானங்கள் சுமார் 3800 மணி நேரங்கள் பயணம் செய்துள்ளன. இது போன்ற ஒரு தருணத்தில் நீங்கள் களத்தில் இணைகிறீர்கள்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1728457

*****************



(Release ID: 1728552) Visitor Counter : 164


Read this release in: English , Urdu , Hindi , Punjabi