புவி அறிவியல் அமைச்சகம்

டையு, சூரத், நந்தர்பார், போபால், நவ்காங்க், ஹமிர்பூர், பரபங்கி, பரேலி, சஹரன்பூர், அம்பாலா மற்றும் அமிரதசரஸ் வழியாக வடக்கு எல்லை பருவமழை தொடர்ந்து கடந்து செல்கிறது

இடுகை இடப்பட்ட நாள்: 17 JUN 2021 4:28PM by PIB Chennai

இந்திய வானிலை துறையின் தேசிய வானிலை முன்னறிவிப்பு மையத்தின் படி:

(வியாழக்கிழமை, 17 ஜூன் 2021; வெளீயீட்டு நேரம்: இந்திய நேரப்படி பிற்பகல் 1.45)

அனைத்திந்திய வானிலை தகவல்கள் மற்றும் முன்னறிவிப்பு

* டையு, சூரத், நந்தர்பார், போபால், நவ்காங்க், ஹமிர்பூர், பரபங்கி, பரேலி, சஹரன்பூர், அம்பாலா மற்றும் அமிரதசரஸ் வழியாக வடக்கு எல்லை பருவமழை தொடர்ந்து கடந்து செல்கிறது.

* ராஜஸ்தான், பஞ்சாபின் எஞ்சியிருக்கும் பகுதிகள் மற்றும் ஹரியானாவுக்கு பருவமழை மேலும் முன்னேற்றம் அடைவதற்கான சூழல் சாதகமாக இல்லை. ஆனால், குஜராத் மற்றும் உத்தரப் பிரதேசத்தின் சில பகுதிகளுக்கு அடுத்த 2 அல்லது 3 நாட்களில் மெதுவாக முன்னேற வாய்ப்பிருக்கிறது.

* கங்கையோர மேற்கு வங்கத்தின் மீது நிலவும் புயல் சுழற்சியின் காரணமாக பிகார், ஜார்கண்ட், மேற்கு வங்கம், சிக்கிம் மற்றும் வடக்கு ஒடிசாவின் சில பகுதிகளில் அடுத்த 2-3 நாட்களுக்கு பலத்த முதல் மிக கன மழை பெய்யக்கூடும்.

* கிழக்கு உத்தரப் பிரதேசம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளின் மீது நிலவும் புயல் சுழற்சியின் காரணமாக கிழக்கு உத்தரப் பிரதேசத்தில் அடுத்த 2-3 நாட்களுக்கு பலத்த முதல் மிக கன மழை பெய்யக்கூடும்.

* காற்றழுத்தத்தின் காரணமாக கொன்கன், கோவா மற்றும் மத்திய மகாராஷ்டிரத்தில் அடுத்த 2-3 நாட்களுக்கும், கர்நாடகா, கேரளா மற்றும் மாஹேவில் அடுத்த இரு நாட்களுக்கும் பலத்த முதல் மிக கன மழை பெய்யக்கூடும். அடுத்த 24 மணி நேரத்தில் கொன்கன், கோவா மற்றும் மத்திய மகாராஷ்டிரத்தின் சில பகுதிகளில் மிக கன மழை பெய்யக்கூடும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1727915

 

-----


(வெளியீட்டு அடையாள எண்: 1727953) வருகையாளர் எண்ணிக்கை : 185
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Punjabi , Kannada