ஜல்சக்தி அமைச்சகம்
அனைத்து வீடுகளுக்கும் குடிதண்ணீர் குழாய் இணைப்பு கிடைப்பதை உறுதி செய்வதற்காக ஜல் ஜீவன் இயக்கத்தின் கீழ் கேரளாவிற்கு ரூ 1,804 கோடியை மத்திய அரசு ஒதுக்கீடு
Posted On:
16 JUN 2021 6:32PM by PIB Chennai
2024-க்குள் அனைத்து வீடுகளுக்கும் குடிதண்ணீர் குழாய் இணைப்பு கிடைப்பதை உறுதி செய்வதற்கான பிரதமர் திரு நரேந்திர மோடியின் லட்சியத்தை நிறைவேற்றும் விதமாக, ஜல் ஜீவன் இயக்கத்தின் கீழ் கேரளாவிற்கு 2021-22-ம் ஆண்டில் ரூ 1,804.59 கோடியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. 2020-21-ல் ரூ 404.24 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், இந்தாண்டிற்கான நிதி நான்கு மடங்கிற்கும் அதிகமாக உயர்த்தப்பட்டுள்ளது.
இதற்கு ஒப்புதல் அளித்து பேசிய மத்திய ஜல் சக்தி அமைச்சர் திரு கஜேந்திர சிங் செகாவத், 2023-க்குள் அனைத்து கிராமப்புற வீடுகளுக்கும் குடிதண்ணீர் குழாய் இணைப்பு வழங்குவதற்கான அனைத்து உதவியும் செய்யப்படும் என்று உறுதியளித்தார்.
கேரளாவில் உள்ள 44.14 லட்சம் வீடுகளுக்கு இன்னமும் குடிதண்ணீர் இணைப்பு இல்லை. அம்மாநில முதல்வர் மற்றும் ஜல் சக்தி அமைச்சருக்கு இடையேயான கூட்டத்தில் முடிவெடுத்தவாறு, 2023-க்குள் அனைத்து வீடுகளுக்கும் குடிதண்ணீர் குழாய் இணைப்பு வழங்கப்படும்.
2020-21-ம் ஆண்டில் மிகவும் குறைவான அளவில் 4.04 லட்சம் வீடுகளுக்கு மட்டுமே இணைப்புகள் வழங்கப்பட்டிருப்பது குறித்து ஜல் சக்தி அமைச்சகம் கவலை தெரிவித்தது.
2020-21-ம் ஆண்டில் கேரளாவிற்கு ரூ 404.24 கோடி மத்திய நிதி வழங்கப்பட்ட நிலையில், ரூ 303.14 கோடியை மட்டுமே பயன்படுத்திக்கொண்ட அம்மாநில அரசு, குடிதண்ணீர் குழாய் இணைப்புகள் வழங்குவதற்கான நிதியான ரூ 101.06 கோடியை திரும்ப அளித்தது. இந்த வருடத்திற்கான மத்திய அரசு நிதி, செலவிடப்படாத நிதி மற்றும் மாநில அரசின் பங்களிப்பு ஆகியவற்றை சேர்த்து, ரூ 3,689.32 கோடி ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் இருப்பதாக கேரளா உறுதியளித்துள்ளது.
அதிகரிக்கப்பட்டுள்ள நிதி ஒதுக்கீட்டின் மூலம், ஜல் ஜீவன் இயக்கத்தின் கீழ் குடிதண்ணீர் இணைப்புகளை வழங்கும் பணி மாநில அரசால் துரிதப்படுத்தப்பட்டு, அனைத்து கிராமப்புற வீடுகளுக்கும் குழாய் இணைப்புகள் வழங்கப்படும் என்று கேரள முதல்வருக்கு எழுதியுள்ள கடிதத்தில் மத்திய அமைச்சர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1727636
----
(Release ID: 1727706)
Visitor Counter : 196