ரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சகம்

மத்திய அமைச்சர் திரு சதானந்த கவுடாவை மத்தியப் பிரதேச முதல்வர் இன்று புதுதில்லியில் சந்தித்தார்

प्रविष्टि तिथि: 16 JUN 2021 6:45PM by PIB Chennai

மத்திய ரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சர் திரு சதானந்த கவுடாவை மத்தியப் பிரதேச முதல்வர் திரு சிவராஜ் சிங் சவுகான் இன்று புதுதில்லியில் உள்ள மத்திய அமைச்சரின் அலுவலகத்தில் சந்தித்தார்.

விவசாயிகளின் தேவையை பூர்த்தி செய்யும் விதத்தில் போதுமான அளவு உரங்கள் மத்தியப் பிரதேசத்திற்கு வழங்கப்படும் என்று திரு கவுடா தெரிவித்தார். ஜூன் 14-ன் படி, 5.49 லட்சம் மெட்ரி டன் யூரியா மற்றும் 2.86 லட்சம் டிஏபி மத்தியப் பிரதேசத்தில் உள்ளன. தன்னால் முடிந்த அனைத்து வழிகளிலும் அமைச்சரவை உதவும் என்று மத்திய அமைச்சர் உறுதி அளித்தார்.

பிரதமர் திரு நரேந்திர மோடி வரலாற்று சிறப்புமிக்க முடிவொன்றை எடுத்து டிஏபி-க்கான மானியத்தை ஒரு மூட்டைக்கு ரூ 700 உயர்த்தி வழங்கினார் என்று அமைச்சர் கூறினார். இதன் மூலம் ஒரு மூட்டை மீதான மொத்த மானியம் ரூ 1200 ஆக உயர்ந்தது. இதர உரங்களுக்கும் அதிக மானியம் கிடைக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

2020 டிசம்பரில் இருந்து டிஏபி மற்றும் அதன் மூலப்பொருட்களின் விலை சர்வதேச அளவில் உயர்ந்ததாக திரு கவுடா கூறினார். எனவே, என்பிகே உரங்கள் மற்றும் சிங்கிள் சூப்பர் பாஸ்பேட் போன்ற நல்ல மாற்றுகளை பயன்படுத்துவதற்கு ஊக்கமளிப்பது அவசியமாகும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1727644

 

----


(रिलीज़ आईडी: 1727691) आगंतुक पटल : 191
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Kannada