ஜல்சக்தி அமைச்சகம்

ஜல் ஜீவன் இயக்கத்தின் கீழ் 2021-22 ஆம் ஆண்டில் ஆந்திரப் பிரதேசத்திற்கு ரூ.3183 கோடி ஒதுக்கீடு

Posted On: 15 JUN 2021 3:42PM by PIB Chennai

ஒவ்வொரு வீட்டிற்கும் சுகாதாரமான குடிநீர் குழாய் இணைப்புகளை வழங்கும் பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையைப் பூர்த்தி செய்யும் வகையில் ஜல் ஜீவன் இயக்கத்தின் கீழ் 2021-22 ஆம் ஆண்டில் ஆந்திரப் பிரதேச மாநிலத்திற்கு ரூ. 3182.88 கோடியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. கடந்த 2020-21 ஆம் ஆண்டு ரூ. 790.48 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. நான்கு மடங்கு உயர்த்தப்பட்ட ஒதுக்கீட்டிற்கு அனுமதி வழங்குகையில் மத்திய ஜல்சக்தி அமைச்சர் திரு கஜேந்திர சிங் ஷெகாவத், அம்மாநிலத்தில் 2024-ஆம் ஆண்டிற்குள் ஒவ்வொரு வீட்டிற்கும் குடிநீர் குழாய் இணைப்பை வழங்குவதற்குத் தேவையான அனைத்து ஆதரவும் அளிக்கப்படும் என்று உறுதியளித்தார்.

ஆந்திரப் பிரதேசத்தில் 18650 கிராமங்களில் மொத்தம் உள்ள 95.66 லட்சம் வீடுகளில், 46.89 லட்சம் வீடுகளுக்கு (49.02%) குடிநீர் குழாய் இணைப்புகள் வழங்கப்பட்டு விட்டன. கடந்த 2019-ஆம் ஆண்டு ஜல் ஜீவன் இயக்கம் தொடங்கப்பட்டபோது ஆந்திரப் பிரதேசத்தில் 30.74 லட்சம் (32.14%) வீடுகள் மட்டுமே குடிநீர் குழாய் இணைப்புகளைப் பெற்றிருந்தன. 21 மாதங்கள் 16.14 லட்சம் (16.88%) வீடுகளில் இணைப்புகள் வழங்கப்பட்டன. இது, தேசிய உயர்வை விட 22% குறைவாகும்.

ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் எஞ்சியுள்ள 48.77 லட்சம் வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்புகள் வழங்கும் பணியை அந்த மாநிலம் விரைவுப்படுத்த வேண்டும். 2021- 22-ஆம் ஆண்டில் 32.47 லட்சம் வீடுகளுக்கும், 2022-23-ஆம் ஆண்டு 12.28 லட்சம் வீடுகளுக்கும், 2023-24 ஆண்டு 6 லட்சம் வீடுகளுக்கும் இணைப்புகளை வழங்க அம்மாநிலம் திட்டமிட்டுள்ளது.

2024 மார்ச் மாதத்திற்குள் ஒவ்வொரு வீட்டிற்கும் இணைப்பை வழங்குவதற்கு ஏதுவாக அனைத்து கிராமங்களிலும் குழாய் இணைப்புகளை வழங்குவதற்கான பணிகள் தொடங்கப்பட வேண்டும் என்று ஆந்திரப்பிரதேச முதல்வருக்கு எழுதியுள்ள கடிதத்தில் திரு கஜேந்திர சிங் ஷெகாவத் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1726964

*****************



(Release ID: 1726991) Visitor Counter : 156


Read this release in: Telugu , English , Urdu , Hindi