வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
இந்தியாவில் 2021 மே மாதத்துக்கான மொத்த விலை குறியீடு எண்கள் ( அடிப்படை 2011-12=100) வெளியீடு
Posted On:
14 JUN 2021 12:00PM by PIB Chennai
இந்தியாவில் 2021ம் ஆண்டு மே மாதம்(தற்காலிகம்) மற்றும் மார்ச் மாதத்துக்கான(இறுதி) மொத்தவிலை குறியீட்டு எண்களை( அடிப்படை ஆண்டு: 2011-12) தொழில் வளர்ச்சி மற்றும் உள்நாட்டு வர்த்தக துறையின் பொருளாதார ஆலோசகர் அலுவலகம் வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட உற்பத்தி நிறுவனங்களில் இருந்து சேகரிக்கப்படும் தரவுகள் அடிப்படையில் மொத்தவிலை குறியீடுகளின் தற்காலிக எண்கள் ஒவ்வொரு மாதமும் 14ம் தேதி (அல்லது அடுத்த வேலை நாளில்) இரண்டு வார கால தாமத்துடன் வெளியிடப்படுகிறது. 10 வாரங்களுக்குப்பின், இந்த விலைக் குறியீடு இறுதி செய்யப்பட்டு வெளியிடப்படும்.
2021 மே மாதத்துக்கான ஆண்டு பணவீக்க விகிதம் 12.94 சதவீதம். 2020 மே மாதத்துடன் ஒப்பிடுகையில் 3.37 சதவீதம் குறைவு. கடந்தாண்டு மே மாதத்துடன் ஒப்பிடுகையில், குறைவான அடிப்படை விளைவு மற்றும் பெட்ரோலியப் பொருட்கள் மற்றும் உற்பத்தி பொருட்களின் விலை உயர்வு ஆகியவை, 2021 மே மாதத்தில் பணவீக்கம் அதிகரித்ததற்கு முக்கிய காரணம். 2021 ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடுகையில், மே மாதத்தில் மொத்தவிலை குறியீட்டு எண்களில் ஏற்பட்டுள்ள மாற்றம் 0.76 சதவீதம்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1726879
*********************
(Release ID: 1726933)
Visitor Counter : 336